எத்தனை முறை என்னை - Eththanai Murai Ennai
எத்தனை முறை என்னை மன்னிப்பீரோ !
எப்படி என் நெஞ்சில் இடம் கேட்பீரோ !
மறுதலித்தும் மறுவாய்ப்பெனக்களித்தீர்
மகன் என்று மனதார அழைக்கின்றீர்
மறுபடி மறுபடி நான் பாவத்தில் விழுந்தும்
மாறுவேன் ஒருநாள் என காத்திருந்தீர்
இனியும் தாமதிப்பதில்லை
இனி நான் உங்க செல்லப்பிள்ளை-2
அருகே உம்மை வைத்துக்கொண்டே
நான் பாவம் செய்த நேரம்
என்ன நினைத்தீரோ?
இதயம் நான் உமக்கு சொந்தம் என்று
நான் அதை அறிந்தும் கெடுத்தேன்
எப்படி பொறுத்தீரோ?
நினைத்துப்பார்க்கிறேன்
உணர்ந்து சொல்கிறேன்
இனியும் தாமதிப்பதில்லை
இனி நான் உங்க செல்லப்பிள்ளை-2
பலமுறை எச்சரித்தபோதும்
அதை உதாசினம் செய்தேன்
என்ன நினைத்தீரோ?
உம் குரல் தெளிவாக கேட்டும்
கேளாததுபோல் இருந்தேன்
எப்படி பொறுத்தீரோ?
நினைத்துப்பார்க்கிறேன்
உணர்ந்து சொல்கிறேன்
இனியும் தாமதிப்பதில்லை
இனி நான் உங்க செல்லப்பிள்ளை-2
என் ஒவ்வொரு அசைவிலும்
உம் சித்தம் செய்யனும்
என் ஒவ்வொரு செயலும்
உம்மை மகிமைப்படுத்தனும்
நான் வாழ்கின்ற வாழ்க்கையில்
உம்மை பிரதிபலிக்கணும்
என்னை காண்கின்ற யாவரும்
உம்மை பார்க்கணும்
இனி நான் பழைய மனிதன் இல்லை
அப்பா நான் உங்க செல்ல பிள்ளை
Chellapillai | செல்லப்பிள்ளை Solomon Jakkim