அரசனைக் காணமலிருப்போமோ - Arasanai Kaanamaliruppomo

 அரசனைக் காணமலிருப்போமோ - Arasanai Kaanamaliruppomo


அரசனைக் காணமலிருப்போமோ? - நமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ?


பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்

பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத


1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! - யூத - அரசனை


2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! - மேற்குத்

திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!

பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்

பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! - யூத - அரசனை


3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்

அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!

இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்

எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! - யூத - அரசனை


4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை

அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!

மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்

வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! - யூத - அரசனை


5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்

பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!

வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ

வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத - அரசனை



Arasanai Kaanamaliruppomo? Namathu

Aayulai Veenaaga Kazhippomo 


Paramparai Gnanaththai Pazhippomo Yuthar

Paadanu Pavangalai Ozhippomo - Yutha


1.Yaahkobilor Velli Uthikkumentrae Israel

Raaja Sengolengum Kathikkumentrae

Aakkamilanthu Maruvaakkuraiththa Paalaam

Theerkkan Mozhi Poiyaatha Baakkiyamae - Yutha


2.Deaso Mayaththaaragai Thontruthu Paar Mearkku

Thisai Vazhi Kaatti Mun Selluthu Paar

Poosanai Kaana Nankodaikal Kondae Avar

Ponnadi Vananguvom Nadauvmintrae - Yutha


3.Alangaaramanai Ontru Thonuthu Paar Athan

Alagu Manamum Kannum Kavarnthathu Paar

Elavara Sankirkkum Nitchayam Paar Naam

Eduththa Karumam Siththiyaakidum - Yutha


4.Aramanaiyil Avarai Kaanomae Athai

Agantru Thenmaarkkmaai Thirumbuvamae

Maraintha Udu Atho Paar Thirumbinathae Bethleam

Vaasalail Namai Kondu Searkkuthu Paar - Yutha


5.Pon Thoobavarkkam Vellai Pollamittae Raayar

Porkazhal Archanai Purivomae

Van Kannan Yearothai Paaraamal Deva

Vaakkinaal thirumbinom Soraamal - Yutha


அரசனைக் காணமலிருப்போமோ - Arasanai Kaanamaliruppomo


Post a Comment (0)
Previous Post Next Post