யேசு நசரையி னதிபதியே - Yeasu Nasarayi Nathipathiyae

 யேசு நசரையி னதிபதியே - Yeasu Nasarayi Nathipathiyae


பல்லவி


யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும்.


அனுபல்லவி


தேசுறு பரதல வாசப் பிரகாசனே

ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. - யேசு


சரணங்கள்


1.இந்த உலகு சுவை தந்து போராடுதே,

எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;

தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;

சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. - யேசு


2.நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது

நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;

தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;

தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். - யேசு


3.கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;

கேடு பாடுகள் யாவையும் தீரும்;

பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;

பொன்னு லோகமதில் என்னையே சேரும். - யேசு



Yeasu Nasarayi Nathipathiyae

Pava Narar Pinai Yena Varum


Theasuru Parathala Vaasa Pirakaasanae

Jeevanae Amarar Paavanae Magaththuva


1.Intha Ulagu Suvai Thanthu Poraaduthae

Enathudalum Athuvo Disanthu Seeraaduthae

Thanthara Alagai Soozha Nintru Vaathaaduthae

Saami Paaviyagam Noayinil Vaaduthae 


2.Nin Suya Belanallaamal En Belan Yeathu

Ninaiuv Seayal Vasanam Muluthum Pollaathu

Thanjam Unai Adainthean Thavara Vidaathu

Thaangi Aal Karunai Oongi Eppothum


3.Kirubaiyudan En Irudhayanthanil Vaarum

Keadu Paadugal Yaavaiyum Theerum

Porumai Nambikkai Anbu Pothavae Thaarum

Ponnu Logamathil Ennaiyae Searum 



யேசு நசரையி னதிபதியே - Yeasu Nasarayi Nathipathiyae

Post a Comment (0)
Previous Post Next Post