இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum
பல்லவி
இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய
இயேசு நாயகா, வந்தாளும்.
அனுபல்லவி
ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு
சரணங்கள்
1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே - இயேசு
2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. - இயேசு
3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம் தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. - இயேசு
4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க. - இயேசு
Yeasu Naayaga Vanthaalum - Ennaalum Dhivya
Yeasu Naayaga Vanthaalum
Aaseervaathamaaga Intha Neasa Manamae Nantraaga
1.Suntharam Migum Padi Mun Antha Manaveettil
Unthan Arul Thantha Thayai Pola Anbaalae
2.Uththama Sanmaarkka Neari Bakthi Visuvaasam
Niththiya Samaathanam Uttru Vaazha Miga Vaazha
3.Thungam Migu Nan Kanam Vilangi Valamaaga
Mangalam Thonga Nalam Thaanga Nalam Thaanga
4.Niththiya Subasobanamo Ettisaiyinum Pearuga
Puththira Santhaanamae Seazhikka Thazhaikka