உன்றன் திருப்பணியை - Untran Thirupaniyai
பல்லவி
உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவி நானே.
அனுபல்லவி
அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு - உன்றன்
சரணங்கள்
1. வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமே
வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்து ப்ரகாசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ? - உன்றன்
2. வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்
பான முணவுபிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்;
கானகம் மலைசென்று கடும்பணி குளிர் வென்று
போனகம் நீரகன்று புவியி லுழைத்த யேசு. - உன்றன்
3. காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து,-உடல்
பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,
பகைவர் திருடர் மோசமும்,
சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே. - உன்றன்
4. வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே,-இனி
என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய
இசைந்தென் மனது நாடுதே;
ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று,
நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு. - உன்றன்
Untran Thirupaniyai Uruthiyudan Puriya
Uthavaatha Paavi Naanae
Anthakaaramae Nintrun Arunothayamae Kandu
Vantha Naal Mutharkodu Vaithaai Enkkun Thondu
1.Veadhanaththin Porutto Mealavar Nimiththamae
Veliyitta Arikkai Seiyavo Ula
Kaathaayam Suya Nayam Agilaththuriya Pugal
Adainthu Prakaasikkavo
Oothi Kaalang Kalikka Ulagaavi Adainthavan
Neethikeanai Baliyaai Nearnthu Kodu Ulaikkaeno
2.Veanal Kulirai Kandu Meani Miga Vearundu
Vealiyaeraa Thangam Thunkinean Vealai
Paana Munavu Pintha Pala pini Varumentra
Bayaththalae Nitha Manjinean
Kaanagam Malai Sentru Kadum Pani Kulir Ventru
Pongam Neerakantru Puvi Lulaiththa Yeasu
3.Kaado Malai Nathiyo Kadalo Kadanthaluththu
Kasthi Migavae Adainthu Udal
Paadum Kavalai Noiyum Pasiyum Niruvaanamum
Pagaivar Thirudar Mosamum
Saada Kiristhuvukku Thaguntha Paana Paliyaai
Odaththanai Oppiththon Uruthi Enakkillayaiyae
4.Vandi Vagaikalodu Vaalnthum Enathu Koodu
Mayangi Ayarnthu Vaaduthae Ini
Entru Miruppidahthilirunthu Pani Puriya
Isainthen Manathu Naaduthae
Ontrum Uthaviyintru Oorae Alainthu Sentru
Nantrae Nitham Purintha Naranae Paranae Yeasu