சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan

 சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan


பல்லவி


சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்

தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்


அனுபல்லவி


அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து

ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடி

சூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி


1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த

பாவிகளான நமை உசாவி மீட்டாரே

வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த

மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே

கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்

கூடுங்கள் பவத்துயர்

போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள் 

துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்


2.விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்

விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே

மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்

வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே

அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் 

கொண்டாடிட அவர் பதம்

தேடிட வெகு திரள் கூடிடத் 

துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்


3.சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்

சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே

எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்

ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே

உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்

உயர்ந்து வாழ தீயோன்

பயந்து தாழ மிக

நயந்து கிறிஸ்வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்



Sundara Parama Deva Maidhan Yeaga Kiristhuvukku

Thoththiram Pugalchi Niththiya Keerththam Entrum


Antharam Puviyum Thanthu Sontha Jeevanaiyum Eenthu

Aattrinaar Namai Ontraai Koottinaar Arul Mudi

Soottinaar Kirubaiyaal Theattrinaarae Thuthi


1.Paathaka Pasaasal Vantha Theetheanum Pavaththaal Nontha

Paavikaalana Namai Usaavi Meettarae

Vedha Pithavukku Ugantha Jaathiyaa Kootta Vantha

Measiyaavai Pattrum Visu Vaasa Veettaarae

Kothanukaa Neethiparan Paathamathin Aatharavil

Koodungal Pavaththuyar

Podungal Jeyaththai Kondadungal

Thuthi Solli Paadungal Paadungal Entrum


2.Vinnilulla Jothikalum Ennadangaa Sothanikalum

Vinthaiyaai Kiristhuvai paninthu Pottravae

Mannilulla Jaathikalum Nannum Pala Porulkalum

Vallaparan Ena Thuthi Solli Yeaththavae 

Annalaam Pithaavukoru Punniya Kumaarai

Kondaadida Avar Patham 

Theadida Vegu Thiral Koodida

Thuthi Pugal Paadida Paadida Entrum


3.Saththiya Tharasarkalum Viththaka Peariyaarkalum

Sangaththoar Kalum Kirubai Thangi Vaalavae

Eththisai Manitharkalum Bakthar Visuvaasikalum

Yeaga Migum Samaathan Maaga Vaazhavae

Uththama Pothakarkalum Sathya Thiru Sabaikalum

Uyarnthu Vaazha Theeyon

Bayanthu Thaazha Miga Nayanthu

Kiristhuvukku Jeyanthaan Nayanthaan Entrum 



சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan

Post a Comment (0)
Previous Post Next Post