சரணம் சரணம் அனந்தா - Saranam Saranam Anantha
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா
சரணங்கள்
1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே
சென்று பல பாடுபடவும் தயவானார் - சரணம்
2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்
தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் - சரணம்
3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி
பாதகனை யோ? இறையை யோ? விட என்றான் - சரணம்,
4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று
திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் - சரணம்
5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே
தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக் கொடுத்தான் - சரணம்
6.கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக
காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான் - சரணம்
Saranam Saranam Anantha Satchithanantha
Thaveethin Maintha Osanna Sarana Pathantha
1.Deva Suthan Ponthiyu Pilaththinidamae
Sentru Pala Paadupadavum Thayavaanaar
2.Thanthu Seithu Ponthiyu Pilaththu Thurai Thaan
Tharparanai Vittu Vida Thannul Enninaan
3.Parapaaso dathipathiyai Paniya Niruththi
Paathaganai Yo Iraiyai Yo Vida Entraan
4.Jeevanuda Athipathiyai Siluvaiyail Kontru
Thirudaiyae Vittuvida Theeyavar Keattaar
5.Thanneer Thanai Eduththu Kai Kaluviyae
Tharparanai Kolvathaekan Koppu Koduththaan
6.Kallanaiyae Vittu Vittu Yutharkatkaaga
Kaavalanai Kurusarai Paaviyum Theerththaan