பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya

 பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya


1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,

நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே


2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்

மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே


3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி

ஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே


4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்

பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று – பரனே


5.ஓசன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே

கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ? – பரனே


6.காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை

போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும் – பரனே


7.செம்புருவையைப் போலே கூடச் சென்றிடக் காய் பாமுன் நின்றிடவும்

அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்து வந்த தென் பாவம் அல்லோ ? – பரனே




1.Paranae Paraporulae Nithya Baakkiyanae Saththiya Vaakkiyanae

Nararaana Paavikatkaai Intha Naanilaththil Vantha Vaanavanae


2.Kaavil Atham Yeavai Devai Karpanai Meerinathaal Ualagil

Meaviya Paavam Ara Polla Venjina Kooliyin Vanjamara


3.Vearoor Malarkkaavil Sentru Veadhanai Pottri Manam Norungi

Aaraa Kodum Thiyaram Unthan Aaththumaththil Varalaanathuvo


4.Eeraaru Seedarkalil Pana Itchai Miguntha Oru Seedan

Pear yuthaaskaari yoththaam Avan Peasinathin Padi Kaasu Peattru


5.Osannaarin Kumbukalai Alai Thodivanthae Ummai Naadi Vanthae

Kannaththil Muththmittae Ummai Kaatti Kodukka Thuninthano


6.Kaatti Koduththidavum Antha Kaathakaraagiya Paathakar Kai

Pottae Pidiththidavum Pinnum Porkaram Katti Eluththidavum


7.Sempuruvai Pola Kooda Sentrida Kaai Paamun Nintridavum

Ambaranae Unthanukku Intha Aabaththu Vantha Then Paavam Alllo


பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya



Post a Comment (0)
Previous Post Next Post