பாவி ஏசுனைத் தானே - Paavi Yeasunai Thaanae
பல்லவி
பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார்
இதைத் தியானியே.
சரணங்கள்
1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்
பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்
மானிடனாக அவதரித்த தெய்வீகன்
வல்ல பேயை ஜெயித்த மா மனுவேலன்.
2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய
தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய
தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய.
3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?
இல்லையானால் உமது இஷ்டமதென்றே
சிந்தை துயரடையச் செப்பினார், அன்றோ
சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால், அந்தோ!
4.கெத்சமனேயில் ஏசு பட்டதை நினையே;
கேவலமான உன்தன் பாவத்தை மறவே;
ஆத்தும நேசர் பதம் ஆவலாய் பணியே;
அன்பின் கரத்தாலுனை அணைப்பார், நிச்சயமே.
Paavi Yeasunai Thaanae Theadi Thuyar Meavinaar
Ithai Thiyaaniyae
1.Param Seeyon Malaikarasar Narpaalan
Parisuththar Thoothar Pani Seiyum Porpaathan
Maanidanaaga Avathariththa Deiveegan
Valla Peayai Jeyiththa Maa Manuvean
2.Theeya Paavigal Paava Niththirai Seiya
Deva Kobakkini Avar Meethil Peiya
Thosham Sumanthu Yeasu Devattu Kutti
Thunba Kadalil Amilnt Thaattruthal Seiya
3.Intha Paaththiram Ennai Vittakalaatho
Illai Aanaal Umathu Ishatamathentre
Sinthai Thuyaradaya Seppinaar Antro
Swami Unakkaai Pinaipattathaal Antho
4.Kesthamaneayil Yeasu Pattathai Ninaiyae
Kevalamaana Unthan Paavaththai Maravae
Aaththuma Neasar Patham Aavalaai Paniyae
Anbin karaththaalunai Anaippaar Nitchayamae