பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai
1.பாவி வா, பாவி வா பரனண்டையே வா
பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா
2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வா
வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா
3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்
நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன்
4.தாகம் மிகுந்தோனே, தண்ணீரண்டை நீ வா
தாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால்
5.உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்
எந்தனுக்கு உந்தன் நெஞ்சம் தந்திடவா
6.உனக்காய் மரித்தேன் ஈனக் கோலமதாய்
எனக்கே உனையே படைப்பாய் நிதமே.
1.Paavi Vaa Paavi Vaa Paranandaiyae Vaa
Paava Paaram Sumanthilaithonae Nee Vaa
2.Paavi Vaa Paavi Vaa Thigaiyaathae Nee Vaa
Varum Paaviyai Oor Pothum Thllaanae Vaa
3.Kaanaatha Aattai Meippan Theadum Maathiri Poal
Naanae Nalla Meippan Unnai Theadi Vanthean
4.Thaagam Migunthonae Thanneerandai Nee Vaa
Thaagam Theerththiduvean Jeeva Thanneerinaal
5.Unthan Paavaththukkaai Naanae Paadupattean
Enthanukku Unthan Nenjam Thanthidavaa
6.Unakkaai Mariththean Eena Kolamathaai
Enakake Unaiyae Padaipaai Nithamae