மகிழ் மகிழ் மந்தையே - Magil Magil Manthaiyae

 மகிழ் மகிழ் மந்தையே - Magil Magil Manthaiyae


பல்லவி


மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்

மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !


அனுபல்லவி


மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;

நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று - மகிழ்


சரணங்கள்


1.வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா

வானங்கள் மேலேறினார் அல்லேலுயா!

தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,

ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ்


2.ஏசுபரன் நமக்கு இறையனார் இது

எல்லார்க்குஞ் சந்தோசம் அல்லேலூயா

வாசம் நாம் செய்ய தந்தை வளவில் இடம்பிடித்த

நேசமுன்னத நேசம் அல்லேலூயா, இன்று -மகிழ்


3.தந்தை வலபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்

சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா !

சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ;

மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று- மகிழ்


4.மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் ,

முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா !

பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்

சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று -மகிழ்


5.பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்

புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா !

ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,

யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று -மகிழ்



Magil Magil Manthaiyae Nee Alleluya Paran

Mainthan Paramearinaar Alleluya 


Magil Magil Param Mainthan Magaththuva Paramearinaar

Nigala Thiru Seanai Paadum Alleluya Intru 


1.Vaanamellaam Nirappa Manusha Mainthan Ella

Vaanangal Mealearinaar Alleluya

Theena Thayaalu Nammai Searntha Thalaivaraayinaar

Gnanamudan Paadungal Alleluya, Intru


2.Yeasu Paran Namakku Iraiyaanaai Ithu 

Ellarkkum Santhosam Alleluya

Vaasam Naam Seiya Thanthai Valavil Idam pidiththa

Neasamunnatha Neasam Alleluya Intru 


3.Thanthai Vala Paakaththil Saththiya Kiristhu Engal

Saththurukkal Mear Siranthaar Alleluya

Sontha kaayangal Kaatti Sugirthamudan Jebippaar

Manthaiyae Unthanukkaai Alleluya Intru


4.Motcha Suthantharar Naam Vaanorkkum Oppar

Mudivilaa Baakkiyar Naam Alleluya

Paazh Jegam Nilaiyalla Param Sanjaarigal Naam

Sootchaman Karththanukkae Alleluya Intru


5.Poothalamantha Mattum Ungaludanae Niththam

Punithan Iruppean Entraar Alleluya

Yeathemakku Kuraisal Yeasenga Lodirnthaaal

Yaathu Mosam Thodarum Alleluya - Intru 



மகிழ் மகிழ் மந்தையே - Magil Magil Manthaiyae


Post a Comment (0)
Previous Post Next Post