குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum
பல்லவி
குருசினில் தொங்கியே குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே-நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,
கொள்ளாய் கண் கொண்டு.
சரணங்கள்
1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ!-தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ. - குருசினில்
2.பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன்போல் தொங்க,-யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை. - குருசினில்
3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ!-தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? - குருசினில்
4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே,-அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது, பார்; - குருசினில்
5.எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ?-நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? - குருசினில்
Kurusinil Thongiyae Kuruthiyum Vadiya
Golgatha Malaithanilae Nam
Kuruveasu Swami Kodun Thuyar Paavi
Kollaai Kan Kondu
1.Sirasinil Mulmudi Uruththida Arainthae
Siluvaiyil Searththaiyo Theeyar
Thirukkarang Kaalkalil Aanikaladiththaar
Seanai Thiral Soozha
2.Paathakar Naduvil Paaviyineasan
Paathakan Poal Thonga Yutha
Paathagar Parikaasangal Panni
Paduththiya Kodumaithanai
3.Santhira Sooriya Sagala Vaan Seanaikal
Sagiyaamal Naanuthaiyo Deva
Sunthara Mainthanuyir Vidu Kaatchiyaal
Thudikka Nenjundo
4.Eettiyaal Sevagan Ettiyae Kuththa
Iraivan Vilavathilae Avar
Theettiya Theetchai Kuruthiyum Jalamum
Thiranthoroduthu Paar
5.Erusalaem Maathae Marugi Neeyaluthu
Yeangi Pulampalaiyo Nin
Erusalaiyathiban Ela Manvaalan
Eduththa Kola Mitho