கள்ளமுறுங் கடையேனுங் - Kallamurung Kadaiyeanung
1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியை
உள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாத
தெள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே.
2.படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுக
முடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்
கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே.
3.மூவினைக்கு மும் முதலாய் மும்முதலு மொரு முதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத்
தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே.
4.மூவாத முதலவனை முதுசுருதி மொழிப் பொருளை
ஓவாத பெருங்குணத்த உத்தமனை உலகனைத்தும்
சாவாத படிகாக்கத் தனுவெடுத்துத் துசங்கட்டுந்
தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே.
5.மறம் வளர்க்குங் களருளத்தை வளமலிதண் பணையாக்கி
அறம்வளர்க்கு அருண்முகிலின் அன்புமழை மாரிபெய்து
புறம்வளர்க்கு இரட்சிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
திறம்வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக் கண்டேனே.
6.காயொளியிற் கதிர்பரப்புங் களங்கமில் நீதியின் சுடரைப்
பாயொளிகொள் பசும்பொன்னை பணிக்கருஞ் சிந்தா மணியைத்
தூயொளிகொள் நித்திலத்தைத் தூண்டாத சுடர் விளக்கைச்
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே.
1.Kallamurung Kadaiyeanung Kadai Theara Perung Karunai
Vellamuganth Arul Pozhiyum Vimalalo Sana Nithiyai
Ullamuva purutheanai Uyirkuyirai Ulavaatha
Thellamugai Theengkaniyai Siluvaimisai Kandeanae
2.Padi Saaitha pearum paava Paranjsumanthu Paramar Thiru
Madi Saaiththa Thirumeani Vathai Thizhi Senguruthiyuga
Mudi saaiththa Pearumaanai Moothalagai Thalai Nasukki
Kodi saaitha kottravanai kurusinmisai kandeanae
3.Moovinaikku Mum Muthalaai Mummuthalu Moru Muthalaan
Deavinaikkai Thozhutheththu Thirikarana Suththaruntham
Naavinai Kondeaththariya Nallaraththin Thanithaayai
Theevinaikoor Arumarunthai Siluvaimisai Kandeanae
4.Moovaatha Muthalvanai Muthusuruthi Mozhi Porulai
Oovaatha Perungunatha Uththamanai Ulganaiththum
Saavaatha Padikkaaka Thanuveduth Thusangattum
Devaatha Devanaiyaan Siluvaimisai Kandeanae
5.Maram Valarkkun Kalaralaththai Valamalithan Panaiyaakki
Aram Valarkku Arun Mugilin Anbu Malai Maari peithu
Puram Valarkku Ratchippin Pugalamaintha Punniyaththin
Thiram Valarkkukum Sealunkiriyai Siluvaimisai Kandeanae
6.Kaayoliry Kathiparappum Kalangamil Neethiyin Sudarai
Paayolikol Pasum ponnai Panikkarunj Sinthaa Maniyai
Thooyoligkol Niththilaththai Thoondaatha Sudar Vilaikkai
Seayolikol Semmaniyai Siluvaimisai Kandeanae
7.பொய்த்திருக்கும் வஞ்சனையும்
பொல்லாங்கும் புறங்கூற்றும்
எத்திருக்கு முடையேமை
யெண்ணியொரு பொருட்டாகப்
பத்திருக்கும் பிரமாணப்
படியொழுகி வினைமுடித்த
சித்திருக்குஞ் செழுந்தவனைச்
சிலுவைமிசைக் கண்டேனே.
8.துன்னெறிபுக் குழல்கின்ற
தூர்த்தரிலுந் தூர்த்தனாய்ப்
பன்னெறிகொள் பரசமயப்
படுகுழிவீழ்ந் தழிவேற்கு
நன்னெறியின் றுணிபுணர்த்தி
நயந்திதயக் கண்டிறந்து
செந்நெறிகாட் டியகுருவைச்
சிலுவைமிசைக் கண்டேனே.
9.அந்தரதுந் துமிமுழங்க
வமரரெலாந் தொழுதேத்தத்
தந்தைதிரு முனமகிமைத்
தவிசிருந்த தற்பரனை
நந்தம்வினை தொலைத்திடற்காய்
நரனாகி நலிந்திரத்தஞ்
சிந்தியுயி ரவஸ்தையுறச்
சிலுவைமிசைக் கண்டேனே.
10.நிந்தனைசெய் திருப்பாணி
நிரையழுத்திக் கொலைபுரியும்
வெந்தொழிலர் செய்வினையின்
விளைவறியார் பொறுத்தருளும்
எந்தையென வெழிற்கனிவா
யிதழவிழெம் பெருமானைச்
செந்தனிக்கோல் கொளுந்தேவைச்
சிலுவைமிசைக் கண்டேனே.