இந்நாளே கிறிஸ்துவெற்றியை - Innaalae Kiristhu Vettriyai
1.இந்நாளே கிறிஸ்துவெற்றியை
அடைந்து தம் பகைஞரைச்
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
ஜெய நாளேன்று பாடுவோம்.
அல்லேலூயா.
2.பேய் பாவம் சாவு நரகம்
எக்கேடும் இன்றையத்தினம்
எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்
கீழாய் விழுந்து கெட்டது.
அல்லேலூயா.
3.இரண்டு சீஷரோடன்றே
வழியில் கர்த்தர் பேசவே,
பேரின்பம் மூண்டு, பிறகு
ஆரென்ற்றியலாயிற்று.
அல்லேலூயா.
4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்
அற்புத காட்சி கண்டபின்
துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்
சந்தோஷப் பூரிப்பாயிற்று.
அல்லேலூயா.
5.புளிப்பில்லாத அப்பமாம்
சன்மார்க்க போதகத்தை நாம்,
வழங்கிக் கொண்டிருக்கின்றோம்
புளித்த மாவைத் தள்ளுவோம்.
அல்லேலூயா.
6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய்
நீர் எழுந்தீர் கெம்பீரமாய்
வெற்றி சிறந்த உமக்கே
மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.
அல்லேலூயா.
1.Innaalae Kiristhu Vettriyai
Adainthu Tham Pagaingarai
Siraipidiththu Kondupom
Jeya Naalentry Paaduvom
Alleluya
2.Peai Paavam Saavu Naragam
Ekkeadum Intrayathinam
Eluntha Kiristhuvin Kaalukku
Keelaai Vilunthu Keattathu
Alleluya
3.Erandu Sheesharodentrae
Vazhiyil Karththar Peasavae
Pearinbamum Moondu Piragi
Aarentriyal Aayittru
Alleluya
4.Annaalil Sheeshar Karththarin
Arputha Kaatchi Kandapin
Thukkiththavarkal Nenjukkuku
Santhosha Poorippaayittru
Alleluya
5.Pulippillaatha Appamaam
Sanmaarkka Pothakaththai Naam
Valangi Kondirukintrom
Puliththa Maavai Thalluvom
Alleluya
6.Karththaavae Engal Neethikkaai
Neer Eluntheer Kembeeramaai
Vettri Sirantha Umakkae
Maa Sthosthiram Undaagavae
Alleluya