ஞானஸ்நான மா ஞானத்திரவியமே - Gnanasnaana Maa Gnanathiraviyamae
பல்லவி
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு
நாமம் ஜலமோடு சேர்.
சரணங்கள்
1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,
நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற - ஞான
2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை - ஞான
3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் - ஞான
Gnanasnaana Maa Gnanathiraviyamae - Thiru
Naamam Jalamodu Sear
1.Vaana Paran Yeasulaga Maanidarkkaai Paadupattu
Vaaiththa Nalam Elavasamaai Koduththida
Gnanamuda Neasagala Maanidarai Seedarakka
Nalla Deva Naamamathai Solli Jalam Vaaru Mentra
2.Thanniraaviyaal Pirakkaar Vindalam Pearaarenavae
Saththiyan Uraiththa Mozhi Suththa Munarnthu
Sinnavar Peariyavarkal Seeriyarkal Pooriyarkal
Semmai Peara Moolguvaarkal Emmulukkil Vedha Murai
3.Kanninaalae Kaanpathenna Thanneer Thaanae Entru Solli
Karththani Nuraimarappa Theththanai Mosam
Annalaar Parisuththaavi Thannaiyuminaikku Nearmai
Arinthavarae Yirukan Thearinthavar Thiruvarul