அப்பா தயாள குணாநந்த - Appa Thayaala Gunaanantha
1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?
2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ?
3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி?
4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே.
5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ?
6. இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்
கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?
7. நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே?-பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே.
1.Appa Thayaala Gunaanantha Monantha Veadha Polla
Ippaaril Kaaibamun Yeagineero Yeasu Naatha
2.Kuttram Sumaththa Poi saatchikalai Theadinaaro Antha
Settralar Ellaam Thirandeagamaai koodinaaro
3.Kannam Asaiththatho Kangal Sivanthatho Swami Pori
Minni Kalangi Visanam Uttreero Nan Neami
4.Meiyaana Saatchi Itdaiyanae Sonna Um Meethae Theeyar
Poiyaana Saatchi Itdaiyo Sumaththinaar Theethae
5.En Kattai Neekki Eedeattra Vaathaikulllaanaeero Ummai
Pin Kattaai Katti Pilaththidan Kondu Ponaaro
6,Iththanai Paadugal Neer Patta Then Kodum Paavamae Entran
Karththanae Un Meethil Vanthathaiyo Deva Kobamae
7.Neer Patta Paattai Poal Aar Pattu Thaanguvaar Deve Pala
Kaarpatta Nenjamum Seer Pattu Pogumae Kovae