அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - Alleluya Alleluya Alleluya

 அல்லேலூயா அல்லேலூயா - Alleluya Alleluya


1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,

இந்நாளில் சாவை வென்றோராம்

விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.

அல்லேலூயா!


2.அஞ்ஞாயிறு அதிகாலை

நல் மாதர் மூவர் கல்லறை

சென்றாரே காண தேகத்தை.


3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;

வெண் ஆடை தூதன் செல்லுவான்;

நாதர் கலிலேயா செல்வார்,


4.பயந்த சீஷர் ராவிலே

கண்டார் கேட்டார் தம் நாதரே!

என் சமாதானம் உமக்கே!


5.உயிர்த்த நாதர் கண்டோமே

என்றோரைத் தோமா கேட்டானே;

நம்பான், சந்தேகங்கொண்டானே.


6.வா, தோமா, என் விலாவைப் பார்;

இதோ, என் கைகள் கால்கள் பார்;

நம்பு, சந்தேகம் தீர் என்பார்.


7.தோமா சந்தேகம் தீர்ந்தனன்;

விலா, கை, கால்கள் நோக்கினன்;

என் நாதா! ஸ்வாமி! என்றனன்.


8.காணாமல் நம்பின பாக்கியர்;

மாறா விஷ்வாசம் வைப்பவர்

அமர வாழ்வு பெறுவர்.


9.மா தூயதாம் இந்நாளில் நாம்

நம் பாடல் தோத்ரம் படைப்போம்;

பரனைப்போற்றி மகிழ்வோம், அல்லேலூயா!



1.Alleluya Alleluya Alleluya

Aa Maantharae Naam Paaduvom

Innaalil Saavai Ventroraam

Vin Maatchi Veandar Pottruvom 


Alleluya


2.An Gnayiru Athikaalai

Nal Maathar Moovar Kallarai

Sentraare Kaana Thegaththai


3.Ammoovar Paarththaar Thoothan Thaan

Ven Aadai Thoothan Selluvaan

Naathar Galileaya Selvaar


4.Payantha Sheeshar Raavilae

Kandaar Keattaar Tham Naatharae

En Samaathaanam Umakkae


5.Uyirththa Naathar Kandomae

Entrorai Thoomaa Keattaanae

Nambaan Santhenkondaanae


6.Vaa Thoomaa En Vilaavai Paar

Itho En kaigal Kaalgal Paar

Nambu Santhegam Theer Enbaar


7.Thoomaa Santhegam Theernthanan

Vilaa Kai Kaalgal Nokkinan

En Naatha Swami Entranan


8.Kaanaamal Nambina Bakkiyar

Maaraa Vishvaasam Vaippavar

Amara Vaaluv Peruvar


9.Maa Thoyathaam Innaalil Naam

Nam Paadal Thothram Padaippom

Paranaipottri Magilvom 


Alleluya

அல்லேலூயா அல்லேலூயா  அல்லேலூயா - Alleluya Alleluya  Alleluya


Post a Comment (0)
Previous Post Next Post