ஆலயம் போய்த் தொழவா - Aalayam Pooi Thozhava

 ஆலயம் போய்த் தொழவா - Aalayam Pooi Thozhava


ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி

ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்


அனுபல்லவி


ஆலயந் தொழுவது சாலவும் நன்றென

ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே

ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் - ஆலயம்


சரணங்கள்


1.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்

பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்

முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை

முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு

மோட்ச மாநகர் காட்சியால் இக காட்சியாம் பரன் மாட்சி காணவே - ஆலயம்


2.பூர்வ முதல் தொழும்பாபோந்தா லயந் தொழுதார்

புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்

ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்

ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்

ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடா தென துள்ளமே இனி - ஆலயம்


3.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று

சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று

இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து

இலகு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து

எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில் ஒன்றவே திரு - ஆலயம்



Aalayam Pooi Thozhava Romentra Thoni

Aanantha Paravasam Aruloo Thaaththumanthanil


Aalayam Pooi Saalavum Nantreana

Aantrorurai Neari Saantra Varkkaanathae

Aavalaayathi Kaalaiyum Pagal Maalaiyum Thiru Naalilum Paran


1.Parama Sannathiyentrum Parisuththa Thootharkal

Paninthu Pagalnthu Keetham Paadiyanjali Seiyum

Muraiyothum Thirumarai Karameanthi Thakshanai

Mulu Manathodu Kondu Ulam Ithal Thuthivindu

Motcha Maanagar Kaatchiyaal Ega

Kaatchiyaam Paran Maatchi Kaanavae


2.Poorva Muthal Thozhumba ponthaa Layan Thozhuthaar

Punitha Suthanum Namakinu Min Maathiri Thanthaar

Aarvamulaaravarae Aaraarudanum Seantraar

Aiyanin Magimaiyae Angum Vilanga Nintraar

Aathalaalini Yaarilunkurai

Yothidathena Thullamae Ini


3.Thanithiyaa Naththudan Samusaara Jebam Nantru

Sabaiyaarodu Archanai Tharuthal Migavum Nantru

Inithae Saththiya Vedham Porularavae Unranthu

Elagu Sudarkal Pola Ulagakoliyae Thanthu

Enthaiyaar Suthan Sinthaiyil Valarntha

Thentrumanpathil Ontravae Thiru 


ஆலயம் போய்த் தொழவா - Aalayam Pooi Thozhava


Post a Comment (0)
Previous Post Next Post