தருணம் ஈதுன் காட்சி சால - Tharunam Eethun Kaatchi Saala

 தருணம் ஈதுன் காட்சி சால - Tharunam Eethun Kaatchi Saala


பல்லவி


தருணம் ஈதுன் காட்சி சால

அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே.


சரணங்கள்


1. கருணை ஆசன ப்ரதாப

சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம்


2. பரர் சுரநரர் பணிந்து போற்றும்

பரம நாயகா,-நின்-பக்தர் தாயகா! – தருணம்


3. உன்னதத்திருந் தென்னை ஆளும்

ஒரு பரம்பரா,-நற்-கருணை அம்பரா! – தருணம்


4. அரிய வல்வினை தீப்பதற்குற

வான தட்சகா,-ஓர்-அனாதி ரட்சகா! – தருணம்


5. அலகைநரகை அகற்றி, முழுதும்

அடிமை கொண்டவா,-என்-தருமை கண்டவா! – தருணம்


6. தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும்,

தேவ பாலனே,-இம்-மானுவேலனே. – தருணம்


Tharunam Eethun Kaatchi Saala

Arul; Anathiye, Dhivya Saruva Neethiye


1.karunai Aasana pirathapa

Samuga Sannitha Meip-Parama unnatha -Tharunam


2.Parar suranarar paninthu pottrum

parama naayaga Nin Bakthar Thaayaka -Tharunam


3.Unnathathirun Thennai Aalum

Oru Paramparaa Narkarunai Ambaraa-Tharunam


4.Ariya valvinai Theeppatharkura

Vaana Thatchaka Oor Anathi Ratchaka -Tharunam


5.Alagai Naragai Agattri Muzhuthum

Adimai Kondavaa En Tharumai Kandva -Tharunam


6.Thinamthinam Narar Kirangum Erangum

Deva paalanae Immanuvealanae -Tharunam



தருணம் ஈதுன் காட்சி சால - Tharunam Eethun Kaatchi Saala


Post a Comment (0)
Previous Post Next Post