சுய அதிகாரா சுந்தரக் குமாரா - Suya Athikaaraa Sunthara kumaaraa
பல்லவி
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய
சரணங்கள்
1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே
அதையொரு பம்பரம் போலிசைத்தனையே
துகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய
2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய
3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த – சுய
4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தாயே
பாவச்சுவை தோள் சுமந்து தீர்த்தாயே
சாமியுணைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சுமனுக் கேட்டருள்வாய் -சுய
Suya Athikaaraa Sunthara kumaaraa
Sontha Ulaganthanai Thurantha Marimainthanaana - Suya
1.Agilaththai Oru sollaal Amaithanaiyae
Athai oru pamparam polisaithanaiyae
Thugil pola kaayamathai laguvaai samaiththathiale
Jothi Pola mathiriyaai thookki vaithi langavaitha - Suya
2.Karai matha kattra kulam puviyilundo
Kadalukkavan sollaaiyantri karaikalundo
Thirai Thiraiyaaga Jalam Malai poor kuvinthelunthum
Seathamintri boothalaththai maa thayavaai paathukakkum- Suya
3. Narar palar koodi oru manai mudikka
Rappakalulaithittaalum Naal pidikkumae
Mara muyir Innum Vaan puvi yanaithaiyum oor
Vaarthaiyaal Shana pozhuthil nearththiyaai undakki vaitha - Suya
4. Paava manuvoor mugaththai paarththaayae
Paavasuvai Thozh sumanthu Theerthaayae
Saamiyunai pattrum swami thasaruk kiranga vendum
thanjam thanjam oodi vanthoom kenjumanu keattarulvaai- Suya