சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய - saththaai nishkalamaai orusaamiya

 


சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய - saththaai nishkalamaai orusaamiya


1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய  மும்இலதாய்

சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே

எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து

அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்

கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்

சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்

அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்

கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்

பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்

அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்

நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்

ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை

ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


5.பித்தேறிச் சுழலும் ஜெகப்பேய்பிடித் துப்பவதே

செத்தேன் உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மம தாய்

எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று

அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


6.துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்

தப்பா தேவெளியாநடுநாளெனைத் தாங்கிக்கொள்ள

இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்

அப்பா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


1.saththaai nishkalamaaiy orusaamiya  mumilathaai

siththaaiy aananthamaai thikalkinta thiriththuvamae

eththaal naayadiyaen kadaiththaeruvan enpavantheernthu

aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae


2.emmaa vikkuruki uyireenthu puranthatharkor

kaimmaarunndukolo kataikaarung kaiyadaiyaai

summaa ratchannai sei sol suthantharam yaathumilaen

ammaan unnaiyallaal enakkaarthunnai yaaruravae


3.thiraisaer vempavamaam kadal mulkiya theeyaremai

karaiser thuikka vente punnaiyaayinai kannniliyaan

parasean pattukilaen ennai pattiya pattuvidaai

arase unnaiyallaal enakkaarthunnai yaaruravae


4.thaayae thanthai thamar kurusampaththu natpevaiyum

neeyae emporumaan kathivaerilai ninnnayangaann

aeyae entrikalum ulakodenak kennurimai

aayae unnaiyallaal enakkaarthunnai yaaruravae


5.piththaerich sulalum jega paeypidi thuppavathae

seththaen unnarulaal pilaiththaenmatru jenmama thaai

eththo shangalaiyum poruththentum irangukaventu

aththaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae


6.thuppaar sinthaiyilaen maraintheettiya tholvinaiyum

thappaa thaeveliyaa nadunaalenaith thaangikkolla

ippaa ruyyavente manukkolame duththa engal

appaa unnaiyallaal enakkaarthunnai yaaruravae

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய - saththaai nishkalamaai orusaamiya




Post a Comment (0)
Previous Post Next Post