பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum

 பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum

பல்லவி


பாதம் ஒன்றே வேணும்;-இந்தப்

பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்


சரணங்கள்

1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற்

காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம்


2. சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்

பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன் - பாதம்


3. வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை

ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற் - பாதம்


4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,

நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற் - பாதம்


5. நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேற வல்

ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன் - பாதம்


6. பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர

சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன் - பாதம்



Paatham Ontrae veanum - Intha

Paaril Enakku Mattreathum Veandaam - Un


1.Naathanae Thunga Mei Veadhnae Pongunar

Kaathaludan Thuiya Thoothar Thozhunj Seiya


2.Seerum Puyalinaal Vaarithi Pongida

Paaril Nadanthaar Poal Neer Meal Nadantha Un


3.Veesum Kamazh Konda Vaasanai Thailaththai

Aasaiyudan Mari Poosi panintha Por


4.Pokkidamattra Em Aakkinai Yaavaiyum

Neekkidavae Maran Thookki Nadantha Nar


5.Naanilaththoor Uyar Vaan Nila Thera Val

Aaani Thulaithida Thaanae Koduththa Un 


6.Paatham Adainthavar Kaatharavaai Pira

saatham Arul Yeasu Naathanae Entrum Un 


பாதம் ஒன்றே வேண்டும் - Paatham Ontrae veandum


Post a Comment (0)
Previous Post Next Post