கண்களை ஏறெடுப்பேன் - Kankalai Yeareduppean

 கண்களை ஏறெடுப்பேன் - Kankalai Yeareduppean 


பல்லவி


கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்

கண்களை ஏறெடுப்பேன்


அனுபல்லவி


விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து

எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்


1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்

காலைத் தள்ளாட வொட்டார்

வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்

காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்


2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்

பக்தர் நிழல் அவரே

எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது

அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்


3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே

எல்லாத் தீமைகட்கும்

பொல்லா உலகினில் போக்குவரத்தையும்

நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்


Kankalai Yeareduppean - maameru Nearaai En

Kankalai Yeareduppean


Vinman undakkiya viththakanidamirunthu

Ennilla oththasai entranukkae varum


1. Kaalai thallada vottaar - urangathu Kappavar

Kaalai thallada vottaar

Vealayil Nintisravealarai kappavar

Kaalaiyum Maalaiyum Kannurangathavar 


2. Bakthar Nizhal avarae ennai aatharithidum

Bakthar nizhal avarae

Ekkaala nilamaiyil enai saethapaduththathu

Akkolam kondonai akkaalam puriyavae


3. Ella theemaikatkkum Ennai  vilakkiyae

Ella theemaikatkkum

Polla ulaginil pokkuvaraththaiyum

Nallaththu Maavaiyum Naadorum kappavar 


கண்களை ஏறெடுப்பேன் - Kankalai Yeareduppean


Post a Comment (0)
Previous Post Next Post