களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே - Kalikooruvoom Karthar Nam Patchamae

 களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே - Kalikooruvoom Karthar Nam Patchamae


1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே,

தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;

அவர் நமக்கு யாவிலும் எல்லாமே,

எப்பாவம் பயம் நீக்குவார்.


கர்த்தர் நம் பட்சம்

கர்த்தர் நம்மோடு

கர்த்தர் சகாயர்

யார் எதிர்க்க வல்லோர்?

யார் யார் யார்?

யார் எதிர்க்க வல்லோர்?

யார் வல்லோர்?


2.திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்

கர்த்தாவின் வல்ல கரத்தால்;

உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,

அவரே திடன் ஆகையால்.


3.வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய்

கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே;

பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய்

நிலைக்கும், இது மெய் மெய்யே.


4.நிலைத்திருப்போம், கர்த்தரின் கட்டினில்,

அதால் நித்திய ஜீவன் உண்டாம்;

பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில்

வைத்தென்றும் பாதுகாப்பாராம்.


1.Kalikooruvoom Karthar Nam Patchamae

Tham Raththathaal Nammai Meetppaar

Avar Namkku Yaavilum Ellamae

Eppaavum Bayam Neekkuvaar


Karthar Nam Patcham

Karthar Nammodu

Karthar Sagayar

Yaar Ethirkka Vallor

Yaar Yaar Yaar

Yaar Ethirkka Vallor

Yaar Vallor?


2. Thidanadaivom Theemai Mearkullvom

Karthavin Valla karaththaal

Unmai Bakthiyaai Naadorum Jeevippom

Avarae Thidan Aagaiyaal


3. Vaakkai Nambuvom Uruthi Mozhiyaai

Kiristhuvil Aam Amen Entrae

Boomi Olinthum Entrum Uruthiyaai

Nilaikkum Ithu Mei meiyae


4. Nilaithiruppom Kartharin kattinil

Athaal Niththiya Jeevan Undaam

Pattrum Yealaiyai Tham Valla karaththil

Vaithentrum Paathukappaaraam


களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே - Kalikooruvoom Karthar Nam Patchamae


Post a Comment (0)
Previous Post Next Post