காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Thedu
பல்லவி
காலமே தேவனைத் தேடு - ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,
சீரான நித்திய ஜீவனை நாடு --- காலமே
சரணங்கள்
1.மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு - காலமே
2.பாவச் சோதனைகளை வெல்லு - கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய - காலமே
3.சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை
செய்யா திருங்களென்றார் மனதார
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் - காலமே
4.வேலையுனக்குக் கைகூட - சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே - காலமே
Kaaalamae Devanai Theadu - Jeeva
Kaarunyar Paatham Paninthu Mantraadu
Seelamudan Patham Paadi Kondaadu
Seeraana Niththiya Jeevanai Naadu
1.Mannuyirkkaai Mariththaarae - Manu
Mainthaneana Peayar Vaiththirunthaarae
Un Sirushtikarai Nee Uthayaththilennu
Ullangkaninthu Thani Jebam Pannu
2.Paava Sothaikalai Vellu Ketta
Paarudal Peaiyudan Porukku Nillu
Jeeva Kreedam Siraththilaniya
Sinthanai Sei Manuvelanai Paniya
2.Siruvarkal Ennidam Seara Thadai
Seiyaa Thirungalrntraar Manathaara
Paraloga Selva Mavarkku Palikkum
Baakkiyamellaam Paranthu Jolikkum
4.Vealai Umakku Kaikooda Sathya
Veathan Kirubai Varaththai Mantraada
Kaalai Theaduvorennai Kandadaivaarae
Kanviliththu Jebam Seiyumentraarae