இரக்கமுள்ள மீட்பரே - Irakkamulla Meetparae

 இரக்கமுள்ள மீட்பரே - Irakkamulla Meetparae


1. இரக்கமுள்ள மீட்பரே,

நீர் பிறந்த மா நாளிலே

ஏகமாய்க் கூடியே நாங்கள்

ஏற்றும் துதியை ஏற்பீரே.


2. பெத்தலை நகர்தனிலே

சுத்த மா கன்னிமரியின்

புத்திரனாய் வந்துதித்த

அத்தனேமெத்த ஸ்தோத்திரம்!


3. ஆதித் திருவார்த்தையான

கோதில்லா ஏசு கர்த்தனே,

மேதினியோரை ஈடேற்ற

பூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்!


4. பாவம் சாபம் யாவும் போக்க,

பாவிகளைப் பரம் சேர்க்க,

ஆவலுடன் மண்ணில் வந்த

அற்புத பாலா ஸ்தோத்திரம்!


5. உன்னதருக்கே மகிமை,

உலகினில் சமாதானம்;

இத்தரை மாந்தர்மேல் அன்பு

உண்டானதும்மால், ஸ்தோத்திரம்!


6. பொன் செல்வம், ஆஸ்தி மேன்மையும்

பூலோக பொக்கிஷங்களும்

எங்களுக்கு எல்லாம் நீரே

தங்கும் நெஞ்சத்தில் ஸ்தோத்திரம்!



1.Irakkamulla Meetparae

Neer Pirantha Maa Naalilae

Yeagamaai Koodiyae Naangal

Yeattrum Thuthiyai Yearppeerae


2.Beththalai Nagarthanilae

Suththa Maa Kannimariyin

Puththiranaai Vanthuthitha

Aththanae Meththa Sthosthiram


3.Aathi Thiruvaarththaiyaana

Kothillaa Yeasu Karththanae

Meathiniyorai Eedeattra

Boothalam Vantheer Sthosthiram


4.Paavam Saabam Yaavum Pokka

Paavikalai Param Searkka

Aavaludan Mannil Vantha

Arputha paala Sthosthiram


5.Unnatharukkae Magimai

Ulaginil Samaathaanam

Iththarai Maanthar Meal Anbu

Undaanathummal Sthosthiram


6.Pon selvam Aasthi Meanmaiyum

Boolaga Pokkisankalum

Engalukku Ellam Neerae

Thangum Nenjaththil sthosthiram


இரக்கமுள்ள மீட்பரே - Irakkamulla Meetparae


Post a Comment (0)
Previous Post Next Post