இன்றைத்தினம் உன் அருள் - Intrathinam Un Arul

 இன்றைத்தினம் உன் அருள் - Intrathinam Un Arul


பல்லவி


இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்


அனுபல்லவி


அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை

வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. - இன்


சரணங்கள்


1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்

பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;

ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,

ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். - இன்


2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்

கடைக்கண் ணோக்கி, அவற்றின் மேலே,

ஐயா நின் ஆசீர்வாதம் அருளி, என் மனோவாக்கு

மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக. - இன்


3. எத்தனையோ விபத்தோர் நாளே;-தஞ்சம் நீ என

எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே;

பத்தர் பாலனா, எனைப் பண்பாய் ஒப்புவித்தேன், உன்

சித்தம் எனது பாக்கியம், தேவ திருக்குமாரா. - இன்


4. பாவ சோதனைகளை வென்று, பேயுலகுடல்

பண்ணும் போர்களுக் கெதிர் நின்று,

ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல

தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து. - இன்



Intrathinam Un Arul Eeguvaai Yeasu Naathaiya

Intrathinam Un Arul Eeguvaai


Antrun Uthiram Nararkentru Sinthi Meettennai

Ventriyudan Ratchiththa Polae Enakku


1.Pona Raavil Ennai Kan Paarththaai Palavithamaam

Polla Mosangalil Tharkaaththaai

Eena Saaththaan Ennaiyae Edarkkul Agappaduththi

Oonam Enakku seiyya Thurukkamudan puranthaai


2.Kaiyittu Kollum Entran Vealai Yaavilumuntran

Kadaikkan nokki Avattrin Mealae

Aiyya Nin Aaseervaatham Aruli En Manovaakku

Meiyaal Nin Magimaiyae Vilungum Padi Ozhuga


3.Eththanaiyo Vipaththor Naalae Thanjam Nee Ena

Eliyean Adainthean Untran Thaalae

Bakthar Paalanaa Enai Panpaai Oppuviththean Un

Siththam Enathu Bakkiyam Deva Thirukumaaraa


4.Paava sothanaigalai Ventru Peayulagudal

Pannum Poorkalukku Keathir Nintru

Jeeva paathaiyil Intrum Thidanaai Munnittu Sella

Deva Sarivaayuthaththai Sirakka Enakkaliththu


இன்றைத்தினம் உன் அருள் - Intrathinam Un Arul


Post a Comment (0)
Previous Post Next Post