அதிகாலையிலுமைத் தேடுவேன் - Athikaalaiyil Ummai Theaduvean
பல்லவி
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தே
வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.
அனுபல்லவி
இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! - அதி
சரணங்கள்
1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப்
போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதி
2.பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது,-தப்
பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட,
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? - அதி
3.நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! - தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
புகழான நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! - அதி
Athikaalaiyil Ummai Theaduvean Muzhu Manathaalae
Devaaseer Vaatham Peara Naaduvean Jeba Thaabaththaalae
Ithukaarum Kaaththa Thanthai Neerae
Inimealum Kaaththarul Seiveerae
Pathivaaga Ummilae Naan Nilaikkavae
Paththiramaai Enai Uththamanaakkidum Deve
1.Ponaraa Muluthum Paathukaatharulina Poothaa
Eppothum Engaludaniruppathaai Uraiththa Nal Naathaa
Eenappaavi Keathunai Logilundu Porpaathaa
Enakkaana Eesanae Vaana Raasana
Intha Naalilum Oru Panthamillaamal Kaarum Neethaa
2.Pala sothanaikalaal Soozhnthu Naan Kalangidumpothu
Thappaathu Nin Kirubai Thaangida Veanum Appothu
Vilakaathu En Samoogam Entra Vakkil Thavareathu
Visuvaasankondu Mei Paasamoondida
Vikkinam Yaavilum Vettri Kaanuvean Malaiveathu
3.Narar Yaavarkku Muttra Nanbanaai Nadanthidavaiyae T
Thee-Naavin Paavamara Nanmaigal Mozhinthida Seiyae
Paraloga Aaviyai Nal Maaripoleanilae Peiyae
Pugalaana Naathanae Veadhanai Pothanae
Pooranmaai Unai Pottruvean Thinam Thinam meiyae