யூத ராஜசிங்கம் - Yutha Raja Singam

 யூத ராஜசிங்கம் - Yutha Raja Singam


யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்


சரணங்கள்


1. வேதாளக் கணங்கள் ஓடிடவே

ஓடிடவே, உருகி வாடிடவே - யூத


2. வானத்தின் சேனைகள் துதித்திடவே

துதித்திடவே, பரனைத் துதித்திடவே - யூத


3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன

தெறிபட்டன, நொடியில் முறிபட்டன - யூத


4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே

எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே - யூத


5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்

அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் - யூத


6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை

மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை - யூத


7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்

பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் - யூத



Yutha Raja Singam Uyirthealunthaar

Uyirthealunthaar Naragai Jeyiththealunthaar


1.Veadhala Kanangal Oodidavae

Oodidavae Urugi Vaadidavae


2.Vaanaththin Seanaigal Thuthithidavae

Thuthithidavae Paranai Thuthithidavae


3.Maranaththin Sangiligal Theripattana

Theripattana Nodiyil Muripattana


4.Elunthaar Entra Thoni Engum Keatkuthae

Engum Keatkuthae Payaththai Entrum Neekkuthae


5.Maathar Thootharai Kandamagilnthaar

Agamaginthaar Paranai Avar Pugalnthaar


6.Uyirththa Kiristhu Ini Marippathillai

Marippathillai Ini Marippathillai


7.Kiristhorae Namathavar Paatham Panivom

Paatham Panivom Pathathai Siramanivom 


யூத ராஜசிங்கம் - Yutha Raja Singam


Post a Comment (0)
Previous Post Next Post