உன்னதமானவரின் உயர் மறைவில் - Unnathamanavarin Uyar Maraivil
பல்லவி
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
அனுபல்லவி
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
சரணங்கள்
1. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையுமவரே - அவர்
2. இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் - அவர்
3. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒருக்காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே - அவர்
4. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ?
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் - அவர்
5. உன் வழிகளிலெல்லாம் உன்னை தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தன் கரங்களில் ஏந்திடுவார் - அவர்
6. சிங்கத்தின் மேல் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பார்
அவர் நாமத்தை நீ முற்றிலும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் - அவர்
7. ஆபத்தில் அவரை நான் நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் - அவர்
Unnathamanavarin Uyar Maraivilirukkiravan
Sarva Vallavarin Nilalil Thanguvaan
Ithu Parama silakkiyamae
Avar settaikalin Keel Adaikkalam Pugavae
Tham Siragukalaal Mooduvaar
1.Devan En Adaikalmae En Koattaiyum Aranumavar
Avar Saththiyam Parisaiyum Keadagamaam
En Nambikkiaiyumavarae
2.Iravin Bayangaththirkkum Pagalil Parakkum Vilunthaalum
Irulil Nadamaadum Kollai Noaikkum
Naan Bayapadavae Mattean
3.Aayiram Pathinaayiram Pearkal Un Pakkam Vilunthaalum
Athu Oru Kaalaththum Unnai Anukidathae
Un Devan Un Thaabaramae
4.Devan Un Adaikalamae Oru Pollappum Unnai Searumo
Oru Vaathaiyum un koodaraththaiyae
Anugamalae Kaaththiduvaar
5.Un Vazhi Kalilellaam Unnai Thootharkal Kaaththiduvaar
Un Paatham Kallil Idarathapadi
Than Karangalil Yeanthiduvaar
6.Singaththin Meal Nadanthu Valu Sarpaththaiyum Mithippaar
Avar Naamaththai Nee Muttrilum Nambinathaal
Unnai Viduviththu Kaaththiduvaar
7.Aabaththil Avarai Naan Kooppidum Vealiyilum
Ennai Thappuviththae Muttrum Ratchippaarae
En Aathuma Neasaravar