இயேசு நேச மீட்பா - Yesu Neasa Meetpaa
1. இயேசு நேச மீட்பா!
என்னை ரட்சித்தீர்
மாசு நீக்கி முற்றும்
சுத்தனாக்கினீர்
என்ன நேரிட்டாலும்
உம்மை சேவிப்பேன்
பொன்னகர் மன்னனாய்
கிரீடம் சூட்டுவேன்!
பல்லவி
ஆத்துமத்தைத் தாறேன்
என்ன நேரிட்டாலும்
முழு ஜீவன் தாறேன்
மாள்வோரை மீட்க!
2. சத்திரம் இருந்தே
உம்மைப் பின் செல்வேன்;
இத்தரை துன்பிலும்
நித்தம் பிரியேன்!
சொர்க்கத்தில் கிரீடம்
பெற்று நான் வாழ,
சிலுவைக் கஸ்தியும்
சகித்திடுவேன் - ஆத்துமத்தை
3. கஷ்டமோ நஷ்டமோ
கர்த்தா! விலகேன்
இஷ்டத்தோ டெவையும்
சகித்திடுவேன்;
துஷ்டப் பாவிகளை
துணிந் திழுக்க
தூய தைரியம் நீயே
தா வல்ல கோவே! - ஆத்துமத்தை
4. ஆத்துமாக்கள் நித்தம்
அழிகின்றாரே!
பார்த்துப் பெலன் தாரும்
போர் நான் செய்யவே!
சத்துரு நடுங்கி
சாத்தான் விழுவான்;
இத்தரையிலும்மை
முடி சூட்டுவேன் - ஆத்துமத்தை
1.Yesu Neasa Meetpaa
Ennai Ratchiththeer
Maasu Neekki Muttrum
Suththanaakkineer
Enna Nearittaalum
Ummai Seavippean
Ponnakar Mannanaai
Kireedam Soottuvean
Aaththumaththai Thaarean
Enna Nearittaalum
Muzhu Jeevan Thaarean
Maalvorai Meetka
2.Saththiram Irunthae
Ummai Pin Selvean
Iththarai Thunbilum
Niththam Piriyean
Sorkaththil Kireedam
Pettru Naan Vaazha
Siluvai Kasthiyum
Sakiththiduvean
3.Kastamo Nastamo
Karththaa Vilagean
Istaththo deavaiyum
Sakiththiduvean
Thusta paavikalai
Thunin Thilukka
Thooya Thairiyam Neeyae
Thaa Valla Kovae
4.Aaththumakkal Niththam
Azhikinraarae
Paarththu Belan Thaarum
poor Naan Seiyavae
Saththuru Nadungi
Saaththaan Viluvaan
Iththaraiyilummai
Mudi Soottuvean