வீரரும் நாங்களே ஜெய - Veerarum Nangalae Jeya
பல்லவி
வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே - இயேசு
ராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே!
சரணங்கள்
1. ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,
அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே - வீர
2. துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்
பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் - வீர
3. பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,
ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் - வீர
4. நரக பாதையில் விரைந்து செல்வோரை
இரக்கமுள்ள இயேசுவண்டை இழுத்துக் கொள்ளுவோம் - வீர
5. சேனையிலே நாம் நல்ல சேவகம் செய்வோம்
வானத்திற்கு ஏகு மட்டும் சோதனை வெல்வோம் - வீர
Veerarum Nangalae Jeya Theerarum Naangalae - Yeasu
Raajanukkaai Yuththam Seiyum Veerarum Naangalae
1.Orumaiyodum Naam Pearumai Kaattaamal
Arumai Yeasuvai Nambi Vanthaal Tharuvaar Jeyamae
2.Thunbamo Saavo Nangal Ontrukkum Anjoom
Pin Vangaamal Poor Purinthu Seayaiyiliruppom
3.Paavaththai Muttrumae Pagaiththu Thalluvom
Aaviyin Abishekaththai Pettru Mun Selvom
4.Naraga Paathaiyil Virainthu Selvoorai
Erakkamulla Yeasuvandai Ezhuththu Kolluvom
5.Seanaiyilae Naam Nalla Sevagam Seivom
Vaanaththirkku Yeaadu Mattum Sothanai Velvom