வேத நூல் ஓதிடும் நல்ல - Veadha Nool Oothidum

 வேத நூல் ஓதிடும் நல்ல  - Veadha Nool Oothidum 


1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!

பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே!

பேதையாம் ஏழையேன் பாதை செல்ல

நீர் அல்லால் யாருமில்லை!


பல்லவி


இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை

இயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை!


2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே

நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே

சத்துரு சேனையில் வெற்றி தர

நீர் அல்லால் யாருமில்லை! - இயேசு


3. ஒரே பிதாவை அறிந்திடவே

பரிசுத்தாவியைப் பெற்றிடவே

வேறேது போக்கும் வழியுமில்லை

நீர் அல்லால் யாருமில்லை! - இயேசு


4. சாத்தான் தலையைச் சிதைப்பதற்கும்

அவனை வெற்றி சிறப்பதற்கும்

சமாதான தேவன் கிருபை செய்ய

நீர் அல்லால் யாருமில்லை! - இயேசு


5. நன்மை ஏதும் செய்யத் தெரிகிலேன்

தின்மையே யான் செய்யத் திறனுளேன்;

நற்செய்கை யாகும் உம் சித்தம் செய்ய,

நீர் அல்லால் யாருமில்லை! - இயேசு


6. நினைவுக்குள் பாவம் வருகுதையா,

கனவுக்குள் என்னை இழுக்குதையா

ஆவி உடல் உயிர் மீட்பதற்கே

நீர் அல்லால் யாருமில்லை! - இயேசு


7. தேவன் மகத்துவத்தில் வரவே

ஜீவ கிரீடத்தைத் தான் தரவே;

அப்போதும் நாங்கள் பாடிடுவோமே;

நீர் அல்லால் யாருமில்லை! - இயேசு



1.Veadha Nool Oothidum  Nalla Meippaa

Paathaiyum Saththiyamum Jeevan Neerae

Peathaiyaam Yealaiyean Paathai Sella

Neer Allaal Yaarumillai


Yeasu Naatha Yealaikku Neer Allaal Yaarumillai

Yeasu Naatha Neer Allaal Yaarumillai


2.Sathya Viswaasaththai Kaaththidavae

Niththam Nin Keerththiyai Paadidavae

Saththuru Seanaiyil Vettri Thara

Neer Allaal Yaarumillai


3.Oorae Pithavae Arinthidavae

Parisuththaaviyai Pettridavae

Veareathu Pokkum Vazhiyumillai

Neer Allaal Yaarumillai


4.Saaththaan Thalaiyai Sithaipatharkkum

Avanai Vettri Sirappatharkkum

Samaathaana Devan Kirubai Seiya

Neer Allaal Yaarumillai


5.Nanmai Yeathum Seiya Therikilaen

Thinmaiyae Yaan Seiya Thiranulean

Narseikai Yaagum Um Siththam Seiya

Neer Allaal Yaarumillai


6.Ninaiuvkkul Paavam Varuguthaiyaa

Kanavukkul Ennai Elukkuthaiyaa

Aavi Udal Uyir Meetpatharkkae

Neer Allaal Yaarumillai


7.Devan Magaththuvaththil Varavae

Jeeva Kireedaththai Thaan Tharavae

Appothum Naangal Paadiduvomae

Neer Allaal Yaarumillai


வேத நூல் ஓதிடும் நல்ல  - Veadha Nool Oothidum


Post a Comment (0)
Previous Post Next Post