உனக்கொத்தாசை வரும் நல் உயர் - Unakkothaasai Varum Nal Uyar

 உனக்கொத்தாசை வரும் நல் உயர் - Unakkothaasai Varum Nal Uyar


பல்லவி


உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ!


அனுபல்லவி


தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. - உன


சரணங்கள்


1. வானம் புவி திரையும் வகுத்த நன்மைப் பிதாவின்

மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள தல்லோ? - உன


2. காலைத் தள்ளாடவொட்டார், கரத்தைத் தளரவொட்டார்;

மாலை உறங்கமாட்டார், மறதியாய்ப் போக மாட்டார். - உன


3. கர்த்தருனைக் காப்பவராம், கரமதில் சேர்ப்பவராம்;

நித்தியம் உன்றனுக்கு நிழலாயிருப்பவராம். - உன


4. பகலில் வெயிலெனிலும், இரவில் நிலவெனிலும்,

இகல் தருவதுமில்லை, இன்னல் செய்வதுமில்லை. - உன


5. தீங்கு தொடராதுன்னை, தீமை படராதுன்மேல்;

தாங்குவார் தூதர் கோடி, தாளிடறாதபடி. - உன


6. போக்கும் ஆசீர்வாதமாம், வரத்தும் ஆசீர்வாதமாம்;

காக்கைக் குஞ்சுகள் முதல் கதறி நம்பிவிடுமே. - உன


7. துன்ப துயரத்திலும் துக்க சமயத்திலும்,

இன்பமுறும் பொழுதும் எல்லாம் உனக்கவரே. - உன


Unakkothaasai Varum Nal Uyar Parvatham Itho


Thinamum Manathu Nonthu Sinthai Kalanguvonae 


1.Vaanam Puvi Thiraiyum Vaguththa Nanmai Pithaavin

Maatchimai Karamae Vallamaiyulla Thalllo


2.Kaalai Thalladavottaar Karaththai Thalaravottaar

Maalai Urangamattaar Marathiyaai Pogamattaar


3.Kaththarunai Kappavaraam Karamathil Searppavaraam

Niththiyam untranukku Nizhalayiruppavaraam


4.Pagalil Veyileaninum Iravil Nilaveninlum

Egal Tharuvathumillai Innai Seivathumillai


5.Thaangu Thodaraathunnai Theemai Padaraathunmeal

Thaanguvaar Thuthaar Koodi Thaalidaraathapadi


6.Pokkum Aasservathamaam Varaththum Aaseervathamaam

Kaakkai Kunjukal Muthal Kathari Nambividumae


7.Thunba Thuyaraththilum Thukka Samayaththilum

Inbamurum Pozhuthum Ellaam Unakkavarae 


உனக்கொத்தாசை வரும் நல் உயர் - Unakkothaasai Varum Nal Uyar


Post a Comment (0)
Previous Post Next Post