துதிப்பேன் துதிப்பேன் இயேசு - Thuthipean Thuthipean Yesu
பல்லவி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அல்லேலூயா பாடி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அனுபல்லவி
துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
தூயவனாய் வந்த தேவகுமாரனை
சரணங்கள்
1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
தம் ஜனத்தின் கூக்குரல்
கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
லோகப் பாவச் சுமைதனை
சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை - துதி
2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
எங்கள் இயேசு நாயகர்
பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
நிலையங்கி தரித்தோராய்
கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை - துதி
3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
அவரருகில் வருவீர்;
வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
லோக பாவத்தைச் சுமந்தார்;
பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை - துதி
4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
பரிசுத்தர் யேகோவாவை
அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
சர்வ வல்ல பராபரன்
வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதி
Thuthipean Thuthipean Yesu Devanae
Alleluya Paadi
Thuthipean Thuthipean Yesu Devanae
Thuthipean logaththin Paavaththai Neekkida
Thooyavanaai Vantha Devakumaranai
1.Karunai Nirantha Kannulloravar
Tham Janaththin Kookural
Karunai Koornthu Keatkkum Kaathullor
Loga Paava sumaithanai
Sirasu Kondu sumanthazhikka Ventrae
Guruseduththu Golgathavil Sentrorai
2.Por Kuthtu vilakku Yealu Maththiyilae
Engal Yesu Naayagar
Porkatchai Maarbinil Katti Nirkiraar
Nilaiyangi Thariththoraai
Karpikkum Kaariyam Kavanamaai Keattu
Sorpadi Seivorai Thappamal Meetporai
3.Vazhiyum Saththiyamum Jeevanum Avarae
Avararukil Varuveer
Vazhiyil Aaruthal Seibavar Avarae
Loga Paavaththai Ozhiththu Muttrumaai
Azhiththu Baktharai Motchaththil Searpporai
4.Alfha Omega Aathiyum Anthamumae
Parisuththar Yehovaavai
Alleluya Ventru Pottri Paaduvom
Sarva Valla paraaparan
Vallmaiyalae Nam Allalellaam Vellum
Nallavar Yesuvai Allum Pagalumaai