இரட்சகா உம்மை நான் பின் - Ratchaka Ummai Naan Pin
பல்லவி
இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே,
எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்!
சரணங்கள்
1. சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும்
உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே - இரட்
2. உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும்
எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே - இரட்
3. பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும்
நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே - இரட்
4. பகைவர் கூடி என்னைச் சிறையில் வைத்தாலும்
இரட்சகா! அங்கும்மைப் பிரஸ்தாபிப்பேனே - இரட்
5. எனக்காக வேதனைப்பட்ட என் நாதா;
உமக்கென்றுழைத்து மரிக்க அருளேன் - இரட்
6. உமக்காக என்னைக் கல்லெறிந்து கொன்றாலும்
ஸ்தேவான் போல் மரிக்கக் கிருபை கூர் ஐயா - இரட்
7. பாவிகளை உந்தன் பதம் சேர்க்கவே நான்
ஆசையாய் யுத்தத்தில் சாக அருளேன் - இரட்
Ratchaka Ummai Naan Pin Selluveanae
Eththanai Paadukal Patteer Enakkaai
1.Saaththaan Than Thanthira Valai Veesinaalum
Um Belaththaalae Naan Thappi Selveanae
2.Ulagam Than Siitrinba Aasai Kaattidinum
Ellaam Arppakuppai Entruthaippeanae
3.Pettaar Uttaar Vanthu Urimai Seithaalum
Neeare Poothum Entru Solli Nirpeanae
4.Pagaivar Koodi Ennai Siraiyil Vaithaalum
Ratchaka Angummai Pirsthaapipean
5.Enakkaga vedanaipatta En Naatha
Umakkentru Ulaithu Marikka Arulean
6.Umakkaga Ennai Kallerinthu Kontraalum
Sthevaan Pol Marikka Kirunai Koor Aiyya
7.Paavikalai Unthan Patham Searkkavae Naan
Aasaiyaai Yuththathil Saaga Arulean