பொல்லாப் பாவ லோகத்தின் மேல் - Polla Paava Logathin Mael
1. பொல்லாப் பாவ லோகத்தின் மேல்
நல்லான் அன்புகூர்ந்தார்!
எல்லார்க்குமிவ ரீடேற்றம்
நல்கினார் தானமாய்
பல்லவி
ஓ! இதென்ன மா நேசம்!
என் மேற்கொண்ட பாசம்!
வன் குருசில் மீட்பர் மாள
வரச் செய்த நேசம்!
2. நம்பிக்கையாலென் நாதனை
சொந்தமாக்கிக் கொள்வேன்;
அவர் சாவால் மீட்படைந்தேன்
ஆம்! சுத்தமானேன் நான் - ஓ! இதென்ன
3. அன்பு மகிமை பூர்த்தியாய்
அளிக்கும் சுத்தர்க்கு,
நம்ப இயேசு கிறிஸ்துவை
நசியும் உள் தீமை - ஓ! இதென்ன
4. நித்திய மோட்ச ஜீவியம்,
இத்தரை ஆரம்பம்!
நித்தமும் நம்பும் ஆத்துமா
பெற்று வாழும் சத்யம்! - ஓ! இதென்ன
1.Polla Paava Logathin Mael
Nallaan Anbukoornthaar
Ellarukumiva Reedettam
Nalginaar Thaanamaai
Oh! Ithenna Maa Nesam
En Mearkonda Paasam
Van Kurusil Meetpar Maala
Vara Seitha Neasam
2.Nambikaiyalean Naathanai
Sonthamakki Kolluvean
Avar savaal Meetpadaithen
Aam! Suththamanaean Naan - Oh!
3.Anbu Magimai Poorthiyaai
Alikkum suththarkku
Namba Yesu Kiristhuvai
Nasiyum Ul Theemai - Oh!
4.Niththiya Motcha Jeeviyam
Iththarai Aarambam
Niththamum Nambum Aathuma
Pettru Vaazhum Sathayam - Oh!