பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் - Piriya Yeasuvin Seanai Veerargal

 பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் - Piriya Yeasuvin Seanai Veerargal

பல்லவி

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;

சிலுவை தோளில் சுமந்து போகலாம்,

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்

சரணங்கள்

1. நம் தேவன் சமாதானப் பிரபுவே

நம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;

நம் ஆத்ம சகாயர் அவரே!

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;

எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;

இயேசுவின் மகா அன்புக்காய்த் தத்தஞ் செய்வோம்,

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

3. இயேசு கிறிஸ்துவின் அன்புக்காய் இறந்திடுவோம்!

புல் பூண்டுமேயானாலும் புசித்திடுவோம்;

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டோம்

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

4. உலக நேசத்தின் ஊற்றை உடைத்து விட்டோம்;

உள்ள மாயைகளெல்லாமே ஒழித்து விட்டோம்;

உள்ளத்தையெல்லாம் உடையவர்க் கொதுக்கி விட்டோம்

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

5. இதொன்றே இரட்சண்ய வழியென்றுணர்ந்தோம்

இதை இருதயத்திலிறுக இணைத்துவிட்டோம்

ஒன்றாயுயிர் வாழ்வோம் இன்றேல் உயிர்விடுவோம்

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

6. சாத்தான் கோட்டைகளையெல்லாம் தகர்த்திடுவோம்

தக்க சமயத்தில் சத்தியத்தைச் சாற்றிடுவோம்

சற்றும் தயங்காமல் சாட்சியைத் தந்திடுவோம்

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

7. அல்லேலூயா ஜெயத்தை அறிவித்திடுவோம்;

அவர் வருகையைப் பற்றி யுரைத்திடுவோம்;

அந்தகார ஆதிக்கங்களை அவமாக்குவோம்;

சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் - பிரிய

Piriya Yeasuvin Seanai Veerargal Naam

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

Siluvai Tholil Sumanthu Pogalaam

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

1.Nam Devan Samaathaana Pirabuvae

Nam Sarvaayutha Varkkam Thaazhmai Thaanae

Nam Aathama Sahaayar Avarae

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

2.Eppothumae Yeasuvai Thiyaanippom

Ellorum Jeeviththiyathai Thiyaagam Seivom

Yeasuvin Mahaa Anbukkaai Thaththam Seivom

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

3.Yeasu Kiristhuvin Anbukkaai Eranthiduvom

Pul Poondumeayaanaalum Pusiththiduvom

Mun Vaitha Kaalai Pin Vaikkamattom

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

4.Ulaga Neasaththin Oottrai Udaiththu Vittom

Ulla Maayaikalellaamae Ozhiththu Vittom

Ullaththaiyellam Udaiyavarkk Kothukki Vittom

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

5.Ithontra Ratchanya Vazhiyentru Unarnththom

Ithai Iruthayaththilirukka Enaiththu Vittom

Ontraayuir Vaazhvom Intreal Uyirviduvom

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

6.Saaththaan Koottaikalai Ellaam Thagarththiduvom

Thakka Samayaththil Saththiyaththai Saattriduvom

Sattrum Thayangaamal Saatchiyai Thanthiduvom

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

7.Alleluyaa Jeyaththai Ariviththiduvom

Avar varugaiyai Pattri Uraiththiduvom

Anthakaara Aathikkangalai Avamaakkuvom

Seanai Veerargal Naam Seanai Veerargal Naam

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் - Piriya Yeasuvin Seanai Veerargal

Post a Comment (0)
Previous Post Next Post