பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து - Piriththu Searththaar Kiristhu
பல்லவி
பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு - நான்
தரித்திருக்கும்படிக்குத் தயவோடு
அனுபல்லவி
பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும்
பரிசுத்த ஊழியப் பணி புரிந்திடவும்!
சரணங்கள்
1. என்மே லவர் கூர்ந்திட்டார் இனிதன்பு - நான்
பொன்னேசுவில் கொண்டிட்டேன் மெய்யன்பு!
மன்னனார் போக்கினா ரென் பாவத்துன்பு!
மாசற என்னுள்ளம் ஆக்கினார் நம்பு! - பிரி
2. கண்டேன் நான் அவர் நன்மை கணக்கில்லை - அதை
விண்டா லதிசயம் இது உண்மை;
கொண்டா ரென் னுள்ளத்தைக் கோமான் தன் பதியாய்
என்றும் நாங்களொன்றாயிருந்திட இசைவாய் - பிரி
3. துட்டப் பேயைத் துரத்தித் துணை செய்வார்!
மட்டற்ற விடுதலை பெறச் செய்வார்!
கிட்டிவரும் அம்பையும் தட்டி விடுவார்!
கீழே விழா தென்னைத் தாங்கியும் கொள்வார் - பிரி
Piriththu Searththaar Kiristhu Avarodu - Naan
Thariththirukkum Padikku Thayavodu
Paraththil Naan Raajanaai Payanam Seithidavum
Parisuththa Oozhiya Pani Purinthidavum
1.Enmeal Avar Koornthittaar Inithanbu - Naan
Ponneasuvil Kontitean Meianbu
Mannanaar Pokkinaaren Paavaththanbu
Maasara Ennullam Aakkinaar Nambu
2.Kandean Naan Avar Nanmai Kanakkillai
Vindaa Lathisayam Ithu Unmai
Kondaaren Ullaththai Koomaan Than Pathiyaai
Entrum Naangal Ontraai Irunthida Isaivaai
3.Thutta Peayai Thuraththi Thunai Seivaar
Mattattra Viduthalai Peara Seivaar
Kittivarum Ambaiyum Thatti Viduvaar
Keekae Vizhathennai Thaangiyum Kozhvaar