பரிசுத்த பரனே துதியுமக்கு - Parisuththa Paranae Thuthiumakku

 பரிசுத்த பரனே துதியுமக்கு - Parisuththa Paranae Thuthiumakku


பல்லவி


பரிசுத்த பரனே துதியுமக்கு

பரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2)


சரணங்கள்


1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த

திருமறை முடிவே, துதியுமக்கு

திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா

கருணையின் கடலே துதியுமக்கு - பரி


2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்

நிலையே, நிதியே, துதியுமக்கு

கெத்சமனேயிலதி துயர் கொண்டாய்

அதிசய அன்பே துதியுமக்கு - பரி


3. அன்னாவின் மனையில் கன்னத்திலறைய

சின்னப்பட்டவரே துதியுமக்கு

முகத்தினில் துப்பி முதுகினிலடித்த

பகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு - பரி


4. நெடுங்குருசேறி கடுந்துயர் கொண்டு

மடிந்த என் சிரசே, துதியுமக்கு

மரணத்தை வென்ற காரணத்தால் இந்த

தருணத்தில் மிகுந்த துதியுமக்கு - பரி


Parisuththa Paranae Thuthiumakku

Paralogam vittavarae Thuthiumakku


1.Narar Sirai Vidukka Surar pugzh veruththa

Thirumarai Mudivae Thuthiumakku

Thirusiththam Seiyya Nararoobamaai Vanthava

Karunaiyin Kadalae Thuthiumakku


2.ThalaiThaanum Vaikka Nilaiyintri Thirinthaai

Nilaiyae Nathiyae Thuthiumakku

Kethsamaneyilathi Thooyar Koondaai

Adisaya Anbae Thuthiumakku


3.Annaavin Manaiyil Kannaththilaraiya

Sinnapattavarae Thuthiumakku

Magaththinil Thuppi Muthukiniladiththa

Pakaivarkku Manniththaai Thuthiumakku


4.Nedunguruseari Kadunthuyar Kondu

Madintha En Sirasae,Thuthiumakku

Maranaththai Ventra Kaaranththal Intha

Tharunaththil Miguntha Thuthiumakku

பரிசுத்த பரனே துதியுமக்கு - Parisuththa Paranae Thuthiumakku


Post a Comment (0)
Previous Post Next Post