பாதம் படைத்தேனே பலியாக - Paatham Padaithenae Paliyaga
பல்லவி
பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே
பாசமாய் ஏற்றுக்கொள் கோனே! - பெருமானே
அனுபல்லவி
ஆதரவானதல்ல - ஆவி தேகமு மெல்லாம்
சரணங்கள்
1. மாதா பிதாவும் முன்னே - மதளைப் பிராயமண்ணல்
பாதம் படைத்து என்னை - பரனுக்கு ஈந்தோமென
செய்த தத்தத்தின் பின்னே - திரும்பவும் ஏழை என்னை - பாதம்
2. அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்
இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்
சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று - பாதம்
3. ஆத்துமா, ஆவி, தேகம், ஐம்புலன், ஆசை, யூகம்
பூர்த்தி, மனம், விவேகம் - பொருள் மனை மக்களகம்,
நேர்த்தி, பெலம், சுகம் - நிகழ் சம்பவங்கள் யாவும் - பாதம்
4. உத்தம சேவை செய்ய - ஊக்கமாய் போர் புரிய
அத்தன் பாதத்தில் பாவ ஆத்துமாக்களைச் சேர்க்க
மத்தியஸ்தனைப் போல மாதிரியாக வாழ - பாதம்
5. அண்ணல் கிறிஸ்தரசே! - அடியேனை மீட்டவரே!
என்ன பாடுபடவும் - என்னை ஒப்புவித்தேனே!
மண்ணில் மயங்காமலே - மறுமைக்குள்ளாகி வைக்க - பாதம்
Paatham Padaithenae Paliyaga Ennaithaanae
Paasamaai Yeattrukol Koonae - Perumaanae
Aatharavaanathall - Aavi Theagamumellam
1.Maathaa Pithavum Munnae - Mathalai Piraayamannal
Paatham Padaiththu Ennai Paranukku Eenthomena
Seitha Thaththathin Pinnae Thirumbavum Yealai Ennai
2.Anthakaaraththinintrum Adimaithanathinintrum
Inbam Kaattiyae Thunbam Eyakku Vanthathinintrum
Sontha Raththathai Sinthi Thookki Ratchithtaayentru
3.Aaththuma Aavi Degam Aimbulan Aasai Yoogam
Poorththi Manam Viveakam Porul Manai Makkalagam
Nearththi Belam Sugam Nigal Sambavangal Yaavum
4.Uththama Sevai Seiya ookkamaai Poor puriya
Aththan Paathaththil Paava Aathumakkalai Searkka
Maththiyasthanai Poola Maathiriyaa Vaazha
5.Annal Kiristharase Adiyeanai Meettavae
Enna Paadupadavum Ennai Oppuviththean
Mannil Mayangaamalae Marumaikullaakki Vaikka