நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே - Naadungal Naadungal Naadungalae
பல்லவி
நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே - புகழ்
பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே
அனுபல்லவி
பாடுறவே பரலோக மதை விட்டு
பாரினில் மனுவாய் வந்தவரை
சரணங்கள்
1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட
பாச மனுவேலன் பாதமுற்று
மாசற்றுலகினில் மானிடனாய் வந்த
இயேசு நாயகனின் நாமமேற்று - நாடு
2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள
தூரமாய் பாவம் தூர்த்து விட்டு
பூதல வாழ்விலே பீடறச் செய்த
புண்ணியவானான இயேசுவையே - நாடு
3. வல்லமை திரித்வ வானவனையே
சொல்லருங் கிருபைப் பிரதாபனையே
துல்லிபத்தில் ஞான தீபனையே! பெரும்
நன்மை யருளும் நம் நாதனையே - நாடு
Naadungal Naadungal Naadungalae-Pugal
Paadungal Paadungal Paadungalae
Paaduravae Paraloga Mathai vittu
Paarinil Manuvaai Vanthavarai
1.Neasamaai Kaasini Ninthai Yakattrida
Paasa Manuvealan Paathamuttru
Maasattrulaginil Maanidanaai Vantha
Yesu Naayaganin Naamamettru
2.Boomikku Mealulla Vaanaththukumulla
Thooramaai Paavam Thoorththu Vittu
Boothala Vaazhilae Peedaraya seitha
Punniyavaanaana Yesuvaiyae
3.Vallamai Thirithuva vaanavanaiyae
Sollarum kirubai Pirathabanaiyae
Thullipaththil Gnana Deepanai Pearum
Nanmai Yarulum Nam Naathanaiyae