கர்த்தா உந்தன் சொந்தம் - Karththaa Unthan Sontham
1. கர்த்தா! உந்தன் சொந்தம் நானே,
நித்த முனில் சுகிப்பேனே;
சுத்திபெற என்னிதயம்
சொரிந்தீர் நீர் உம் உதிரம்!
2. பாவி பெற்றேன் பரம மகிழ்
தேவே! இதுன் அன்பின் திரள்;
கோவே! நான் கொண்டுன்னருள்
குணமடைந்தேன் இதயந்தனில்
3. என்மேல் நீர் கொண்ட நேசம்
யாருங் கூறாததி நேசம்;
உன்னத வீடதின் வாசம்
மன்னா! ஈவீர் சந்தோஷம்
4. இந்த நல்ல பாக்கியங்கள்
எந்தனுக்குத் தந்தீரைய்யா;
சொந்த சுகம் பெலன், தனங்கள்,
சுவாமி உமக்கீந்தேன் மெய்யாய்!
1.Karththaa Unthan Sontham Naanae
Niththa Munil Sugippean
Suththi Pera Ennithayam
Sorintheer Neer Um Uthiram
2.Paavi Peattrean Parama Magil
Theave Ithun Anbin Thiral
Kovae Naan Kodunnarul
Gunadainthean Idhayanthanil
3.En Meal Neer Konda Neasam
Yaarum Kooraathathi Neasam
Unnatha Veedathin Vaasam
Mannaa Eeveer Santhosam
4.Intha Nalla Bakkiyangal
Enthanuku Thantheeraiyaa
Sontha Sugam Belan Thanangal
Swami Umakkeenthean Meiyaai