எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ - Eththarunathil Uyir Evvazhi Piriyumo
பல்லவி
எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ
இதை உணராய் நெஞ்சமே!
அனுபல்லவி
சுத்தப் பரமன் பதம் இத்தரையில் அடைந்து
சொர்க்கப் பதவிக் கிப்போ பக்குவம் செய்யாவிடில்
சரணங்கள்
1. பால வயதினிலோ பாடும் சமயத்திலோ
கோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோ
சீலமுடன் பரனைத்தேடும் சமயத்திலோ
காலன் வரவுகண்டு கலங்கும் தருணத்திலோ - எத்
2. வாலிபன் நான்! இப்போ வயதும் அதிகமில்லை
காலன் வரவுக் கின்னும் காலம் அதிகமென்று
மேலான எண்ணங்கொண்டு வீணாய்க் கழிக்கும் போதோ
கோலொன்று கையில் தாங்கிக் குறுநடை கொள்ளும் போதோ - எத்
3. தாய் தந்தை தமர் தாரம் சகலமிருந்தாலும்
சஞ்சீவி மருந்துகள் கைவசமிருந்தாலும்
தீயன் வலையிற்சிக்கித் திகைக்கும் தருணமதில்
நாயன் உதவியில்லால் நசிவது திண்ணம் திண்ணம் - எத்
4. பாவ உழையிற்பட்டு பரிதபிக்கும் பாவியை
தேவ சுதனேயல்லால் தேடி மீட்பாரேயில்லை!
தாவி நீ அவர் தாளில் தவித்து விழுவாயானால்
பாவியுந்தனை அவர் பண்பாய் இரட்சிப்பாருண்மை – எத்
Eththarunathil Uyir Evvazhi Piriyumo
Ithai Unaraai Nenjamae
Suththa Paraman Patham Iththaraiyil Adainthu
Sorkka Pathavi kippo Pakkuvam seiyyavidil
1.Paala Vayathinilo paadum samayaththilo
Kolamaai Manakolam kozhlum Tharunaththilo
Seelamudan Paranai Theadum Samayaththilo
Kaalan Varauv kandu Kalankum Tharunaththilo
2.Vaaliban Naan Ippo Vayathum Athikamillai
Kaalam varauv kinnum kaalam Athikamentru
Mealana Ennankondu Veenaai Kalikkum potho
kolontru Kaiyil Thaangi kurunadai kozhlum Potho
3.Thaai Thanthai Thamar Thaaram Sakalamirunthalum
Sanjeevi Marunthukal Kaivasamirunthalum
Theeyan Valaiyir sikki Thikaikkum Tharunamathil
Naayan Uthavi illamal Nasivathu Thinnam Thinnam
4.Paava Uvlaiyirpattu Parithabikkum Paaviyai
Deva suthanaeyellaal Theadi Meetparaeillai
Thaavi Nee Avar Thozhil Thaviththu Vizhuvayaanaal
Paaviyunthanai Avar Panpaai Ratchipparunmai