எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் - Ethanai Naavaal Thuthipean Yethum

 எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் - Ethanai Naavaal Thuthipean Yethum


பல்லவி


எத்தனை நாவால் துதிப்பேன் – ஏதும்

அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்!


அனுபல்லவி


பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில்

பிடிபட்ட பாவியை மீட்டதற்காக


சரணங்கள்


1. பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் – பின்னும்

பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்;

ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியை

அழித்துப்போடாமலே வைத்ததற்காக – எத்தனை


2. குடிவெறி களியாட்டுச் செய்தேன் – வாயால்

கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன்

அடியேனை மீட்பதற்காகவே இயேசு

அற்புத நாதரைக் கொடுத்ததற்காக – எத்தனை


3. பாதகரோடு சஞ்சரித்தேன் – நாவால்

பரியாசம் பண்ணியே நாட்களைக் கெடுத்தேனே;

தீதான பாதகர் கூட்டத்தை விட்டு

தேவதாசர்களோடு சேர்த்ததற்காக – எத்தனை


4. உலகத்தைப் பலகாலஞ் சுமந்தேன் – பின்னும்

உறவின் முறையாரைச் சிலகாலஞ் சுமந்தேன்

அலகைப்பயல் போட்ட வலை யாதென்றுணர

அடியேனுக்காவியின் அருள்வரம் கொடுத்தீர் – எத்தனை


5. பதினோராம் மணி நேரம் மட்டும் – கெட்ட

பாவி நான் பாவத்தில் தூங்கிக்கிடந்தேன்;

எதிரொலி ஓசைபோல் மனந்திரும்பென்ற

எக்காள சத்தத்தைக் கேட்டு எழுந்த நான் – எத்தனை


Ethanai Naavaal Thuthipean - Yethum

Attra Maa Paavi Naan Pettra Kirubaikaai


Piththanaam Peayin Adimaithanaththil

Pidipatta Paaviyai Meettatharkaga



1.Paavaththil Janipikkapattean Pinnum

palavitha Aankaarang Kondu Nadanthean

Aabaththil Palamurai Aagapatta Paaviyai

Azhithupodamalae Vaiththarkaga


2.Kudiveri Kazhiyaattu Seithean- Vaayaal

koat solli kobangal Moottiyae Vittean

Adiyeanai Meetpatharkavae Yesu

Aruputha Naatharai Koduththarkaga


3.Paathakarodu Sanjariththean - Naavaal

Pariyaasam Panniyae Naatkalai Keaduthteane

Theethaana Paathagar Koottaththai Vittu

Devathaasarkalodu Searththarkaga


4.Ulagaththai Palakaalam Sumanthean - Pinnum

Uravin Muraiyaarai Silakaalam Sumanthean

Alagaipayal potta valai Yathentrunara

Adiyeanukkaaviyin Arulvaram Kodutheer


5.Pathinoraam Mani Nearam Mattum Ketta

Paavi Naan Paavaththil Thoongikidanthean

Ethiroli Oosaipol Manthrumentra

Ekkala Saththathai Keattu Ezhulntha Naan

எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் - Ethanai Naavaal Thuthipean Yethum


Post a Comment (0)
Previous Post Next Post