எந்தன் சம்பத்தென்று சொல்லவே - Enthan Sampaththentru Sollavae

 எந்தன் சம்பத்தென்று சொல்லவே - Enthan Sampaththentru Sollavae 


பல்லவி


எந்தன் சம்பத்தென்று சொல்லவே - வேறொன் றில்லையே

இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே!


அனுபல்லவி


சாவை வென்று உயிர்த்தெழுந்தார் - வான லோகமதிற் சென்றார்

பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார்


சரணங்கள்


1. குருசிலெனக்காய் மரித்தாரே - க்ரூரவதையாய்

சொர்க்க கானான் சேர்க்கவெனையே

பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி

வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் - எந்தன்


2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து

என்றென்றும் அவரில் நேசமாய்,

இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து

பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே - எந்தன்


3. உத்தம ஊழியன் என்னும் நான் - அத்தன் முன்பாக

எத்தகைய வெட்கமின்றியே;

பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும்

பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே - எந்தன்


4. ஆட்டுக்குட்டியாமென் நேசரின் - சாலேம் நகரின்

நாட்டமுரும் வாசம் திட்டமாம்!

லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும்

துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன் - எந்தன்


5. எந்தன் தேசம் இப்புவியென்று - அன்யனாம் சாது!

சொந்த தேசம் நாடினேன் நன்று;

திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க

மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும் - எந்தன்


Enthan Sampaththentru Sollavae - Vaerontrillaiyae

Yesu Maathiram Sambaththaavaarae


Saavai Ventru Uyirthelunthaar- Vaana Logamathir sentraar

Paaviyaam Enakkaai Entrum Thaathaiudan Yaasikintraar


1.Gurusilenakkaai Mariththarae - Kruravathaiyaai

Sorkka Kanaan Searkkavenaiyae

Paavam Neekki Saabam Maattri Saavin Mealum Jeyam Nalki

Vegam Vaarae entruthi vaarthtai koori yeari sentaar


2.Yesuvukkaai sarva sambaththum yaagamaai vaithu

entrentum avaril neasamaai

yesuvkkaai Vealai seithu En siluvai eduthu

Pirana naathar seavaiyil Ennaayulellaam kazhippean


3.Uththama Oozhiyan Ennum Naan Aththan Munpaaga

Eththakaiya Vetkamintriyae

Bakthiyoden Anbar Munbil Aanantha Pushpanj soriyum

Baakyamearum Makoorsava Vaazhvukaalam Vanthittathae 


4.Aattukuttiyamen Neasarin Saaleam Nagarin

Naattamurum Vaasam Thittamaam

Logamennai kaividinum Thegam Melinthurukinum

Thukkam Sirithenum kollean Yesuvaiyae Pinthodarvean


5.Enthan Desam Ippuviyentru- Anyanaam Saathu

Sontha Desam Naadinean Nantru

Thizhuru Salaemennai Magiluvdan varaverkka

Magimaiyaam Vasalkal tham Thalaikalai Uyarthidum   

எந்தன் சம்பத்தென்று சொல்லவே - Enthan Sampaththentru Sollavae


Post a Comment (0)
Previous Post Next Post