என் பரம பிதா அதிகாஸ்திபன் - En Parama Pitha Athikaasthiban
1. என் பரம பிதா அதிகாஸ்திபன்
பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்
வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்
சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே!
பல்லவி
நானோர் இராஜ புத்ரன் -2
நேச இயேசுவுடன்
நானோர் இராஜ புத்ரன்
2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்
பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;
இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்
எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் - நானோர்
3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்
பாவத்தில் பிறந்து, பாவி அலைந்தேன்
தேவ மக்களில் இப்போ நான் ஒராள்
பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்! - நானோர்
4. வனமோ, குடிலோ? எல்லாம் ஒன்றுதான்,
மேலே எனக்கோர் மாளிகை ஆயத்தம்!
இங்கே பரதேசி! என்றும் பாடுவேன்!
அங்கே சத்தியன் நானோர் இராஜ புத்ரன் - நானோர்
1.En Parama Pitha Athikaasthiban
Boologa Vasthukkal Avar sonthamaam
Velli,pon,Muththukkal Raththina karkalum
Sollonna selvangal Ellam Enthan Pangae!
Nanoor Raaja Puthran-2
Nesa Yesuvudan
Nanoor Raaja Puthran
2.Deva suthan Yesu Maanida Meetppar
Parathesiyaai Thirinthu Mariththaar
Ippo motchaththil Por Keereedathibar
Enakkum Saavin Pin Mootcham Thanthiduvaar
3.Naan Thusthta Pillaiyaai Thirinthean sinnaal
Paavaththil Piranthu,Paavi Aalainthean
Deva Makkalil Ippo Naan Ooraal
Paralogaththin Pangaiyum Adainthean
4.Vaanamo kudilo Ellam Ontruthaan
Mealae Enakkor Maaligai Aayaththam
Engae Paratheasi Entrum Paaduvan
Angae saththiyan Nanoor Raaja Puthran