என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - En meetpar uyirodirukkaiyilae

 என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - En meetpar uyirodirukkaiyilae


என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே


1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்

என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்

விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்

மித்திரனே சுகபத்திரமருளும்


2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ

பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்

சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்

சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்


3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்

அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்

மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்

மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்


4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்

கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்

பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்

பரமபதவியினுள் என்றனை எடுப்பார்


5. போனது போகட்டும் புவி வசை பேசட்டும்

பொல்லான் அம்புகள் எய்திடட்டும்

ஆனது ஆகட்டும் அருள் மழை பெய்திடும்

அன்புமிகும் பேரின்பமெனக்கருள்


En meetpar uyirodirukkaiyilae

Enakkenna kuraivunndu nee sol manamae


1. Ennuyir meetkavae thannuyir koduththor

Ennodirukkavae elunthirundhor

Vinnula guyarndhor Unnathanj Chirandhor

Miththiranae sugapaththiramarulum


2. Paavamo, maranamo, naragamo, peayo

Bayandhu nadungida jeyam sirandhor

Saabamae theerththor sargurunaadhan

Sanjalaminiyaen nenjamae magilvaai


3. Aasi seydhiduvaar arulmiga alippaar

Ambaran thanilenakkaay jebippaar

Mosamae maraippaar munnamae nadappaar

Motchavali sathyam vaasal uyirenum


4. Kavalaigal theerppaar kanneer thudaippaar

Kadaisi mattum kaividaadhiruppaar

Paavamannippalippaar Baakkiyangkoduppaar

Paramapathaviyinul endranai eduppaar


5. Ponadhu Pogattum Puvi Vasai Pesattum

Pollaan Ambugal Yeidhidattum

Aanadhu Aagattum Arul Mazhai Peydhidum

Anbumigum Perinbamenakkarul


என் மீட்பர் உயிரோடிருக்கையிலே - En meetpar uyirodirukkaiyilae


Post a Comment (0)
Previous Post Next Post