அற்புத அற்புதமான ஓர் நாள் - Arputha Arputhamaana oor naal

 அற்புத அற்புதமான ஓர் நாள் - Arputha Arputhamaana oor naal


1. அற்புத அற்புதமான ஓர் நாள்

நான் மறவாத நல் நாள்

இருளில் நான் அலைந்து போனபின்

இரட்சகரை சந்தித்தேன்;

என்ன மா இரக்கமான நண்பர்.

என் தேவையை சந்தித்தார்;

நிழலை நீக்கி இருளை அகற்றினார்;

இன்பமாய் இதைச் சொல்வேன்!


பல்லவி


மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று

சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்

இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்;

மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று!


2. நான் பிறந்தது தேவ ஆவியால்

தெய்வீகக் குடும்பத்தில்

கல்வாரி அன்பால் நீதிமான் ஆனேன்

என்ன மேன்மை என் நிலை!

காரியம் சீக்கிரமாய் நடந்தது,

பாவியாய் வந்த போது;

கிருபையாய்க் கொடுத்தார் நான் அதை எடுத்தேன்

என்னை மீட்டார் தோத்திரம் - மோட்ச


3. நிலைக்கும் நம்பிக்கை என்னிலுண்டு

காலமும் கடந்த பின்;

மோட்சத்தில் என்றென்றுமே ஜீவிப்பேன்;

வாசஸ்தலம் அங்குண்டு!

அற்புதமான அந்நாள் நிமித்தம்

குருசை விசுவாசித்தேன்;

நித்திய ஐசுவரியம் மேலான பாக்யங்கள்

அவர் கையாலே பெற்றேன் - மோட்ச


1.Arputha Arputhamaana Oor naal

Naan Maravaatha Nal Naal

Irulil Naan Alainthu Ponapin

Ratchakarai Santhithean

Enna Maa Irakkamaana Nanbar

En Devaiyai Santhithaar

Nizhlai Neekki Irulai Agattinaar

Inbamaai Ithai Solvean


Motcham Irangi Mahimaiyal Nirappittu

Siluvaiandai yesu Sugamakkinaar

Eravai Pakalakkinaar En Paavathai Kazhuvinaar

Motcham Irangi Magimaiyaal Nirappittu


2.Naan Piranthathu Deva Aaviyaal

Dhiveega Kudumpathil

Kalvaari AAnbaal Neethimaan Aanean

Enna Meanmai En Nilai

Kaariyam Seeikramai Nadanthathu

Paaviyai Vantha Pothu

Kirubaiyaai Koduthaar Naan Athai Eduthean

Ennai Meetaar Thothiram - Motcha


3.Nilaikum Nambikkai Ennilundu

Kaalamum Kadantha Pin

Motchathil Entrentum Jeevipean

Vasasthalam Angundu

Arputhamaan Annaal Nimitham

Kurusai Visuvaasithean

Nithiya Isuvariyam Mealaana Bakkiyangal

Avar Kaiyalae Pettren - motcha

அற்புத அற்புதமான ஓர் நாள் - Arputha Arputhamaana oor naal




Post a Comment (0)
Previous Post Next Post