அந்தகார லோகத்தில் - Anthakaara logaththil
1. அந்தகார லோகத்தில்
யுத்தஞ் செய்கிறோம்
இயேசு நாதர் பட்சத்தில்
அஞ்சாமல் நிற்கிறோம்
பல்லவி
தானியேலைப் போல
தைரியம் காட்டுவோம்
பயமின்றி ஊக்கமாய்
உண்மை பிடிப்போம்
2. பாவச் செய்கை யாவையும்
நேரே எதிர்ப்போம்
துன்பமே உண்டாகிலும்
பின் வாங்கவே மாட்டோம் - தானியேலை
3. மற்றோர் நிந்தை செய்யினும்
அஞ்சித் தளரோம்
பொல்லார் நயம் காட்டினும்
சற்றேனும் இணங்கோம் - தானியேலை
4. வல்ல தேவ ஆவியால்
வெற்றி சிறப்போம்
லோகம் பாவம் அவரால்
மேற் கொண்டு ஜெயிப்போம் - தானியேலை
1.Anthakaara logaththil
Yuththam Seikirom
Yeasu Naathar Patchaththil
Anjaamal Nirkirom
Thaaniyealai Pola
Thairiyam Kaattuvom
Bayamintri Ookkamaai
Unmai Pidippom
2.Paava seigai Yaavaiyum
Nearae Ethirppom
Thunbamae Ungaakilum
Pin Vaangavae Maattom
3.Mattor Ninthai Seiyinum
Anji Thalarom
Pollaar Nayam Kaattinum
Satteanum Inangom
4.Valla Deva Aaviyaal
Vettri Sirappom
Logam paavam Avaraal
Mear kondu Jeyippom